latest news
ஒரு வாய்ப்பும் இல்லன்னாலும் பந்தாவுக்கு குறைச்சல் இல்ல!.. ஓவர் ஆட்டம் போடும் விஷால்!…
Actor vishal: அப்பா தயாரிப்பாளர் என்பதால் சினிமாவில் சுலபமாக நடிகராக மாறியவர்தன் விஷால். நடிகராவதற்கு முன் ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவியாளராக இருந்தார். திமிறு, சண்டக்கோழி போன்ற படங்களின் வெற்றி இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியதோடு, தயாரிப்பாளர்களுக்கும் விஷாலை வைத்து படமெடுக்கலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேநேரம், வெற்றியை விட அதிக தோல்விப் படங்களை கொடுத்த நடிகர் இவர். திமிறு, சண்டக்கோழி, பூஜை, ஆம்பள, பாண்டிய நாடு, இரும்புத்திரை, மார்க் ஆண்டனி போன்ற படங்கள் மட்டுமே ஓடியது. மற்றவையெல்லாம் வெற்றியை பெறவில்லை.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இந்த அமுல் பேபி நடிகரா?!… எப்படி இருந்த மனுஷன இப்படி ஆக்கிட்டீங்களே!…
ஒருபக்கம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சங்கத்தின் தலைவராக மாறினார். அதேபோல், நடிகர் சங்கத்தின் செயலாளர் பதவியில் வென்றார். இந்த இரண்டிலும் வெற்றி கிடைக்கவே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகும் ஆசையும் அவருக்கு வந்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மனுவில் பிழை இருப்பதாக சொல்லி நிராகரிக்கப்பட்டார். கடந்த பல வருடங்களாக அவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஓடுவதில்லை. சில வருடங்களுக்கு பின் மார்க் ஆண்டனி ஹிட் கொடுத்தார். அதோடு சரி. கடைசியாக விஷாலின் நடிப்பில் ரத்னம் படம் வெளியானது.
அதன்பின் எந்த படத்திலும் விஷால் நடிக்கவில்லை. துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்க திட்டமிட்டார். ஆனால், ஃபைனான்ஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான், வீட்டில் சும்மா இருக்கும் அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க கேட்டிருக்கிறார்கள். அதற்கு 18 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அதேபோல், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விஷாலை அணுகி ஒரு புதிய படத்தில் நடிக்குமாறு கேட்க 20 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். அதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கொண்டது. ஆனால், 10 கோடியை முன்பணமாக கொடுக்க வேண்டும் என விஷால் கேட்க அந்த நிறுவனமும் யோசித்து வருகிறது. அந்த 10 கோடியை எடுத்துக்கொண்டு துப்பறிவாளன் 2 படத்தை எடுக்க விஷால் போய்விட்டால் என்ன செய்வது என யோசிக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.
இதையும் படிங்க: கங்குவாவுக்காக ஜோதிகா போட்ட பந்து… அப்படியே ரிபீட்டாகி சிக்சர் ஆகிடுச்சே..! இதெல்லாம் தேவையா?