விஷாலுக்கு தொடரும் பிரச்சினைகள்!..கண்டுபிடித்த ஜோசியர்!..அவர் செய்ய சொன்ன பரிகாரம் தான் ஹைலைட்!..
தமிழ் சினிமாவில் நடிகராக ஒரு தயாரிப்பாளராக வலம் வரும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் ‘செல்லமே’. இந்த படத்தில் லீடு ரோலில் நடித்து மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றார்.
அதன் பின் கமெர்சியல் படங்களான சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி போன்ற படங்களால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். ஆனால் பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபிஸில் இவரின் படங்கள் இன்று வரை சாதனை படைக்க வில்லை. அதன் பின் சொந்தமாக ஒரு புரடக்ஷன் கம்பெனியை ஆரம்பித்து அதன் மூலம் சில படங்களில் நடித்தார் விஷால்.
இதையும் படிங்க : கருத்துகளை காமெடி தடவி நச்சின்னு சொன்ன பாக்கியராஜ் படங்கள்…ஒரு பார்வை…
எனினும் சில காலமாகவே இவரின் நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக எந்த ஒரு படங்களும் வரவில்லை. இதற்கு மத்தியில் இவருக்கு ஏதோ உடல் ரீதியாக பிரச்சினைகள் இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் பரவியது. மேலும் நடிகர் சங்க தேர்தலில் இவர் வெற்றி பெற்றாலும் பிரபலங்கள் சிலரின் அதிர்ப்தியை தான் பெற்றிருக்கிறார் விஷால்.
இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் இந்த மாதிரி தொடர் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த விஷால் திடீரென கர்நாடகாவில் சில பூஜைகள் செய்திருக்கிறார். விசாரித்ததில் இவரின் ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பதாக ஜோசியர்கள் சொல்ல சில பரிகாரங்கள் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறியிருக்கின்றனர். அதன் பேரில் தான் கர்நாடகாவில் அமைந்துள்ள தர்மஸ்தலாவில் மஞ்சு நாதர் கோயிலில் செருப்பாலான பூஜைகளும் குக்கேஷ் சுப்பிரமணியன் கோயிலில் ஏதோ ஒரு வித பலி பூஜையும் செய்தாராம் விஷால். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.