லிப்லாக் சீனில் நடிக்க ரெடி!...நடிகை பகீர்...வடை போச்சேன்னு வருத்தப்படும் விஷால்...
நடிகர் விஷாலின் நடிப்பில் கடைசியாக வந்த படம் எனிமி. இந்த படத்தில் விஷாலுடன் ஆர்யா நடித்திருந்தார். படம் நேர்மறையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் லத்தி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
லத்தி படத்தில் நடிகை சுனைனா லீடு ரோலில் நடித்திருக்கிறார். இந்த ஆண்டின் இறுதிக்குள் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக சரிவுகளையே சந்தித்து வந்த விஷால் எனிமி, லத்தி போன்ற படங்களினால் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் இவரின் ஒரு நேர்காணல் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே நடிகை லட்சுமி மேனனுடன் விஷால் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதை இருவரும் மறுத்து வந்தனர். அதன்பின் அவருக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது, அதுவும் நின்று போனது. இந்த நிலையில் நடிகை லட்சுமி மேனனுடன் விஷால் நேர்காணலில் சந்தித்த போது
லட்சுமி மேனனிடம் லிப்லாக் சீனில் நடிப்பீங்களா? என கேட்க ம்ம்..கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பேன் என்று கூறினார். அதை கேட்டு நடிகர் விஷால் சுசீ..இது முதல்லயே தெரிஞ்சுருந்தா என வருத்தப்படுகிற மாதிரி பேசி சிரித்தார். ஏனெனில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் ‘ பாண்டியன் நாடு’ என்ற படத்தில் ஜோடியா நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் இந்த மாதிரி சீன் ஏதுமில்லை. அதை குறிப்பிடும் வகையில் விஷால் இப்படி நினைத்து சிரித்தார்.