கம்முனு சம்பளத்தை வாங்கிட்டு போயிருக்கலாம்!... இப்போ ஒன்னும் இல்லாம போச்சே!.. புலம்பும் விஷால்...

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் விஷால், இவரின் அப்பா ஒரு தயாரிப்பாளர். இயக்குனராகும் ஆசையில் நடிகர் அர்ஜூனிடம் உதவியாளராக இருந்தார். திமிறு திரைப்படம் இவரை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது. லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த சண்டக்கோழி திரைப்படமும் ஹிட் அடித்து வசூலில் சக்கை போடு போட்டது.

ஆனால், அதன்பின் அவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் இரும்புத்திரை, மார்க் ஆண்டனி ஆகிய இரண்டு படங்களை தவிர மற்ற படங்கள் ஓடவில்லை. எனவே, அவரின் மார்க்கெட் கீழே போனது. சில படங்களை அவரே தயாரித்து நடித்தும் பார்த்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி நடந்த பிரச்னை என்ன? எதுக்காக வெளியேறினார் வெங்கடேஷ் பட்… ஷாக் தகவல்…

இந்நிலையில்தான், ஹரியின் இயக்கத்தில் ரத்னம் என்கிற படத்தில் நடித்தார் விஷால். இந்த படத்தில் விஷாலுடன் சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், யோகிபாபு என பலரும் நடித்திருந்தனர். வழக்கமான ஹரியின் ஸ்டைலில் அதிரடி ஆக்சன் கலந்த பக்கா ஆக்சன் படமாக இப்படம் வெளியானது.

ஆனால், படத்தின் கதை, திரைக்கதை பலவீனமாக இருந்ததால் இப்படம் ரசிகர்களை கவரவில்லை. அதோடு, இப்பட,ம் வெளியானபோது விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனால் பெரிய தியேட்டர்கள் கில்லி படத்தை வெளியிட ரத்னம் படத்துக்கு சிறிய மற்றும் குறைவான தியேட்டர்களே கிடைத்தது.

இதையும் படிங்க: எனக்கு 70 உனக்கு 80.. ‘வேட்டையன்’ செட்டில் இருந்து படுமாஸாக போஸ் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்கள்

ஒருபக்கம், விஷாலுக்கு எதிராக களம் இறங்கிய சிலர் சில ஏரியாக்களில் இப்படத்தை வெளியிடவில்லை. இது தொடர்பாக பேச விஷால் அவர்களை தொடர்பு கொண்டும் அவர்கள் பேசவில்லை. இதை விஷாலே ஊடகத்தில் சொல்லி இருந்தார். அதோடு, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் பரபரப்பு புகாரை விஷால் கூறியிருந்தார்.

ரத்னம் படம் நன்றாக வசூல் செய்யும் என நம்பிய விஷால் தனக்கு சம்பளம் வேண்டாம் அதற்கு பதிலாக அப்படத்தை வினியோகம் செய்யும் உரிமையையை கொடுங்கள் என கேட்டு வாங்கினார். தெலுங்கில் நாலரை கோடிக்கு விற்றுவிட்டார். தமிழ்நாடில் 5லிருந்து 6 கோடி வரை மட்டுமே அவருக்கு ஷேர் வரும் என சொல்லப்படுகிறது. அப்படிப்பார்த்தால் ரத்னம் படம் மூலம் விஷாலுக்கு 5 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. ‘பேசாமல் சம்பளத்தை வாங்கி கொண்டு போயிருக்கலாம்’ என சிரிக்கிறது கோடம்பாக்கம்.

 

Related Articles

Next Story