சினிமாவில் உங்க தலையீடு அதிகமா இருக்கு!.. வேண்டாம் சொல்லிட்டேன்!.. உதயநிதியை சொல்கிறாரா விஷால்?!..

by சிவா |   ( Updated:2024-07-22 06:37:15  )
vishal
X

அப்பா தயாரிப்பாளர் என்பதால் சினிமாவில் சுலபமாக நுழைந்தவர் விஷால். இயக்குனராகும் ஆசையில் அர்ஜூனிடம் உதவியாளராக இருந்து சில படங்களில் வேலை செய்தார். ஆனால், சினிமா உலகம் இவரை நடிகராக மாற்றியது. செல்லமே படம் மூலம் நடிக்க துவங்கினார்.

அதன்பின் விஷால் நடிப்பில் வெளிவந்த திமிறு படம் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இந்த படத்தின் வெற்றி விஷாலுக்கு பல பட வாய்ப்புகளை பெற்ற தந்தது. அடுத்து வந்த சண்டக்கோழி படத்தின் வெற்றி விஷாலை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது.

ஒருபக்கம் விஷால் பிலிம் பேக்டரி என்கிற பெயரில் சொந்த நிறுவனம் துவங்கி அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரிக்கவும் துவங்கினார். இதில், சில படங்கள் லாபம் கொடுத்தாலும் பல படங்கள் தோல்வியை கொடுத்தது. கடந்த சில வருடங்களாக அவரின் படங்கள் எதுவும் ஓடவில்லை.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மட்டும் நல்ல வசூலை பெற்றது. ஆனால், அதுவும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புகாகத்தான். ஒருபக்கம், உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த விஷால் ஒருகட்டத்தில் அவருடன் சண்டை போட்டார்.

மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தடுப்பதாக அப்போதே பரபரப்பு பேட்டி கொடுத்தார். ‘என் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். நீங்கள் மட்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்காதீர்கள்’ என பேசினார் விஷால்

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால் ‘சினிமாவில் அரசின் தலையீடு அதிகமாக இருக்கிறது. இதனால், சின்ன படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. அதோடு, தீபாவளி, பொங்கல், ஆகஸ்டு 15, டிசம்பர் 25 போன்ற பண்டிகை நாட்களிலும் பெரிய படங்கள் மட்டுமே வெளியாகிறது. இதனால், சின்ன பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் தடுமாறுகிறார்கள். போன ஆட்சியில் அரசு தலையீடு இல்லை.’ என பேசியுள்ளார். விஷால் அரசு என சொன்னது உதய நிதியைத்தான் என்றே பலரும் சொல்கிறார்கள்.

Next Story