அந்த பொண்ணுக்காக போய் பிச்சை எடுத்தேன்! – நல்ல உள்ளம் கொண்டு விஷால் செய்த காரியம்..!
தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் விஷால் இறுதியாக நடித்த லத்தி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து விஷால் பெரிதாக நம்பி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி.
இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். கூடிய விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தின் மோஷன் ஃபர்ஸ்ட் லுக் வந்தது முதலே ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கிவிட்டது.
படம் நடிப்பது மட்டுமில்லாமல் விஷால் பல மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார். அந்த வகையில் கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு உதவிய கதையை அவர் பகிர்ந்துள்ளார். கிராமத்தில் இருக்கும் அந்த பெண்ணிற்கு ஸ்டெல்லா மேரிஸ் போன்ற பெரிய வி.ஐ.பிக்கள் படிக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இடம் கிடைப்பது சாதரண விஷயமல்ல. அவ்வளவு எளிதில் அங்கு சீட் வாங்க முடியாது. எனவே இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஷால் அந்த பெண்ணுக்காக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சீட்டு கொடுங்கள் என கையேந்தி உள்ளார்.
விஷாலே கேட்டதால் அந்த பெண்ணிற்கு பிறகு அவர்கள் இடம் கொடுத்துள்ளனர். இந்த விஷயத்தை விஷால் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.