82 வயதில் இப்படி உடம்பா?!.. ஷாக் கொடுத்த விஷாலின் தந்தை.. வைரல் புகைப்படங்கள் உள்ளே!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் இன்னும் வளர்ந்து வரும் லிஸ்டிலேயே இருக்கும் நடிகர் விஷால். நடிகர் மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தன் பணியை செய்து வருகிறார். குடும்பமே சினிமாவில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
விஷாலின் அண்ணன், அண்ணி, அப்பா என கலையுலகில் தங்கள் பங்கை ஆற்றி வருகின்றனர். முதன் முதலில் நடிகர் அர்ஜூன் மூலமாகத்தான் விஷால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். செல்லமே படத்தின் மூலம் தன் நடிப்பை வெளிப்படுத்தினார்.
முதல் படத்திலேயே ரசிகர்களின் அன்பை பெற்ற விஷால் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, மருது, அவன் இவன் போன்ற கமெர்ஷியலான படங்களில் நடித்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார். ஆனால் சமீபத்தில் வெளியான எந்தப் படங்களும் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத் தரவில்லை.
இந்த நிலையில் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தன் தந்தைக்கு கிடைத்த கௌரவத்தை குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.82 வயது மதிக்கத்தக்க விஷாலின் தந்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
அவரது தந்தையான ஜி.கே.ரெட்டி எப்பொழுதும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சில சமயங்களில் விஷாலுடன் சேர்ந்து உடற்பயிற்சிகளை செய்வாராம். இதன் மூலம் தன் உடம்பை மிகவும் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 8 வயதிலேயும் சிக்ஸ் பேக் வைத்து சும்மா கெத்தாக தோன்றுகிறார்.
இதையும் படிங்க : 50 பேருடன் படப்பிடிப்பில் நுழைந்த எம்.ஜி.ஆர்… பதறிப்போன சிவாஜி!.. நடந்தது இதுதான்!..
இதனால் பிட் இந்திய தூதராக விஷாலின் தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சில தினங்களில் அந்தப் பணியில் சேர்ந்து உடற்பயிற்சியின் அவசியத்தையும் அதனால் வரும் பயனையும் எடுத்துக் கூறி பணிகளை மேற்கொள்ள இருக்கிறார் விஷாலின் தந்தை.