கேரக்டருக்காக கருப்பாக மாற தினமும் நாலு மணி நேரம் வெயிலில் படுத்த நடிகர்!
நம்மில் ஒருவர் சினிமாவில் நடித்தால் எப்படி யதார்த்தமாக இருக்குமோ அந்த நடிப்பை நடிகர்களில் ஒரு சிலரிடம் தான் காண முடியும்.
உதாரணத்திற்கு ராமராஜன், விஜய் சேதுபதி என விரல் விட்டு எண்ணும் அளவில் தான் நடிகர்கள் இருப்பார்கள். இந்த வரிசையில் இடம்பெறுபவர் தான் விஷ்ணு விஷால். இவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
17.7.1984ல் வேலூரில் காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றிய ரமேஷ் குடுவாலாவிற்கு மகனாகப் பிறந்தார். சின்ன வயசில இருந்தே விஷால் ரொம்பவே கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்டார்.
திருச்சியில் பள்ளிப் படிப்பை முடித்தார். எஸ்ஆர்எம் பல்கலை.யில் எம்பிஏ. மார்க்கெட்டிங் முடித்தார். கிரிக்கெட் மேல் அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக நிறைய பயிற்சிகள் எடுத்தார். டிஎன்சிஏ விளையாட்டுகளில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் அவரது மிகப்பெரிய ஆசை.
அதற்கான திறமையும் இருந்தது. அந்த நேரத்தில் இவருக்கு மிகப்பெரிய காயம் ஏற்படுகிறது. அதனால் இவர் கிரிக்கெட் ஆட முடியாத நிலையில் உள்ளது. என் வாழ்க்கையே நான் கிரிக்கெட் தான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா இதுவே என்னோட வாழ்க்கையில இல்லாம போயிட்டுது என வருத்தப்படுகிறார். அப்போது தான் இவர் யோசித்துப் பார்க்கிறார்.
நாம எப்படியும் 6 மாசம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கு. அதனால நாம ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்க வேண்டாம். ஜாலியா டிவி பார்க்கலாம்னு நினைக்கிறாரு. அப்ப தான் நிறைய படங்கள் பார்க்க ஆரம்பிக்கிறாரு.
ஒவ்வொரு படங்களாகப் பார்க்க ஆரம்பிக்கும்போது விதவிதமான நடிகர்களின் நடிப்பு அவரைக் கவர்கிறது. அதனால் ஏற்பட்ட ஆர்வம் அவரையும் நடிக்க வேண்டும் என்று தூண்டுகிறது. இதுவரை நடித்ததே கிடையாது. எப்படி நாம நடிக்கிறது என யோசித்தார்.
அப்போது தந்தையின் மாமா வந்து விஷாலுக்கு ஆலோசனை சொல்றாரு. அவர் நிறைய நாடகங்களிலும் நடித்துள்ளார். நிறைய அனுபவங்களும் இருக்கு. அவரோட உதவியால விஷால் ஆக்டிங்க கத்துக்க ஆரம்பிக்கிறாரு.
ஒவ்வொரு ஆடிஷனுக்குமே விஷ்ணு விஷாலுக்குத் தகவல் சொல்றாரு. அதன்படி விஷால் போய் பார்க்கிறார். உண்மையிலேயே இவரது பெயர் விஷால் தான். இந்தப் பெயரில் ஏற்கனவே ஒரு நடிகர் இருக்கிறதால விஷ்ணு என்ற பெயரை முன்னால் சேர்த்துள்ளார்.
ஒரு தடவை டைரக்டர் சுசீந்திரனின் ஆபீஸ்க்கு ஒரு ஆடிஷன்ல போறாரு. அது வெண்ணிலா கபடி குழு படத்தோட ஆடிஷன்ஸ்.
அங்க போகும்போது அந்தப்படத்தோட கதை இவருக்கு ரொம்ப பிடிச்சிப் போயிடுது. வெண்ணிலா கபடி குழுவில் ஒரு கபடி பிளேயர் ரோல் தான். கிராமத்துல விளையாடுற வீரர்ங்கறதால கருப்பா இருக்கணும். இன்னொரு விஷயம் என்னன்னா கபடியைப் பத்தி நல்லா தெரியணும். அதனால இவரு நம்மை நம்பி இந்த ரோல் கொடுத்துருக்காங்க.
இதுதான் நமக்கு முதல் படம் என்றும் இந்த ரோலுக்காக நாம உண்மையா உழைக்கணும்னு நினைச்சிருக்காரு. அதனால தினமும் மொட்டை மாடியில 3....4 மணி நேரம் வெயில்ல படுத்துருப்பாராம். கலர் மாறணும்கறதுக்காக இப்படி செஞ்சிருக்காரு.
தினமும் 3....4 மணி நேரம் கபடி விளையாடி உள்ளார். அப்போது தான் உண்மையான கபடி வீரராக இருக்கும் என்று கடுமையாக உழைத்துள்ளார். படம் வெளியானதும் படத்தில் இவரது நடிப்பு பரவலாகப் பேசப்பட்டது. படமும் வெற்றிகரமாக ஓடியது.
தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி ஆகிய படங்களும் வெளியானது. 2015ல் இன்று நேற்று நாளை என்ற படம் நடித்தார். இது மாஸ் ஹிட்டானது. 2017ல் கதாநாயகன் என்ற படத்தில் நடித்தார். 2018ல் ராட்சசன் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ரொம்ப ரொம்ப அருமையாக தத்ரூபமாக நடித்தார்.
முதல் முறையாக இந்தப் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் பண்ண காபி ரைட்ஸ் கேட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வந்தது. அதுவும் கமர்ஷியல் ஹிட்.
2011ல் ரஜினி நடராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆர்யன் என்ற ஆண்குழந்தை பிறந்தது. 2018ல் தம்பதியருக்குள் சொந்த காரணங்களால் விவாகரத்து ஏற்பட்டது.