லால் சலாம் படத்தில் இத்தனை பஞ்சாயத்தா? அப்புறம் எப்படி சலாம் போட? ஐஸ்வர்யா மீது புகார் கொடுத்த நடிகர்
lal Salaam movie: சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லால் சலாம். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் லீடு ரோலில் நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடிக்க படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.
பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட லால் சலாம் திரைப்படம் அந்தளவுக்கு வெற்றியை பெறவில்லை. அதற்கு காரணம் லைக்கா தமிழ்க்குமரன்தான் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுபாஸ்கரனிடம் கூறியிருக்கிறார். ஏனெனில் லால் சலாம் படத்தை ஒழுங்காக விளம்பரம் செய்யாததே இந்தப் படம் தோல்விக்கு காரணம் என தமிழ்க்குமரன் மீது சுபாஸ்கரனிடம் புகார் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா.
இதையும் படிங்க: அமீர் குறித்து நெத்தியடி பதில் கொடுத்த ஐசு… அண்ணன் – தங்கை உறவில் விழுந்த விரிசல்… என்ன நடந்தது?
இதற்காக சுபாஸ்கரனும் ஏன் விளம்பரம் சரிவர பண்ணவில்லை என தமிழ்க்குமரனிடம் கேட்டதாக கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஒரு சில சினிமா வட்டாரங்கள் படத்தின் கதை நன்றாக இருந்திருந்தால் அதற்கான விளம்பரத்தை அதுவே தேடிக்கொள்ளும் என ஐஸ்வர்யாவை மறைமுகமாக சீண்டியிருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஐஸ்வர்யா மீது விஷ்ணு விஷால் புதியதாக ஒரு புகாரை கொடுத்திருக்கிறாராம். அதாவது விஷ்ணு விஷாலிடம் 45 நாள் கால்ஷீட் வாங்கி 90 நாள்கள் வரை இழுத்துவிட்டதாகவும் அதனால் என்னுடைய எனர்ஜி பாழாகி விட்டது. இப்போது இந்த படத்தால் என் மார்கெட்டும் போய்விட்டது என்று புலம்புகிறாராம் விஷ்ணு விஷால்.
இதையும் படிங்க: மன்சூர் அலிகானை பொளந்து கட்டிய த்ரிஷா இதுக்கு என்ன செய்ய போகிறார்? கொழுந்து விட்டு எரியும் கூவத்தூர் சம்பவம்