ரொம்ப சீன் போடுறாரு.. பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை விமர்சனம் செய்த விஷ்ணு விஷால்.. ஓப்பனா சொல்லிட்டாரு..
தமிழ் சினிமாவில் இப்பொழுது வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலாக் கபடிக் குழு படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.
முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய விஷ்ணு விஷால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் தன்னுடைய கேரக்டருக்கு செட் ஆகக் கூடிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க : அனுதாப ஓட்டுகளை வளைத்துப்போட நினைத்த டி.ராஜேந்தர்… பங்கமாய் கலாய்த்து தள்ளிய கே.எஸ்.ரவிக்குமார்…
இவரின் நடிப்பில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களிலும் நடித்து நல்ல நடிகன் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். நீர்ப்பறவை படத்தில் முழு நீள குடிகாரனாக நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஜீவா படத்தின் மூலம் எனக்கும் ரொமான்ஸ் வரும் என்பதை மிகவும் மென்மையாக வெளிப்படுத்தியிருப்பார்.
ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ராட்சசன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து சாமர்த்தியத்தை நிரூபித்திருப்பார். சொல்லப்போனால் ராட்சசன் படம் தான் இவரின் கெரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படமாக விளங்கியது. சமீபத்தில் வெளியான கட்டாகுஸ்தி படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்தது. குறிப்பிட்டு சொல்லப்போனால் விஷ்ணுவிஷாலின் சினிமா கெரியரில் இந்த படம் தான் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்ற படமாக மாறியது.
இயல்பாகவே விஷ்ணு விஷால் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர். ஒரு நேரத்தில் சினிமா பிரபலங்கள் நடத்திய கிரிக்கெட் போட்டியில் விளையாடி நல்ல ஸ்கோரை கைப்பற்றினார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஒருவரை பற்றி விமர்சனம் செய்துள்ளார் விஷ்ணு விஷால். பௌலிங்கிலும் சரி ஃபீல்டிங்கிலும் சரி ஆல் ரவுண்டராக இருக்கும் ஹர்த்திக் பாண்டியாவை பற்றி சமீபத்தில் விமர்சித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
ஹர்த்திக் பாண்டியா கிரௌண்டில் மிகவும் சீன் போடுறாரு. ஒரு மாதிரியாக வேண்டுமென்றே பாடியை காட்டி வெறுப்பேத்துகிற மாதிரியே இருக்கும். அதை பாத்தாலே காண்டாகும் என மிகவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அவர் என்ன செஞ்சாருனு தெரியலயே!.