இப்படி ஒரு கேள்வி.. ‘லால் சலாம்’ அரங்கத்தையே அதிர வைத்த அஜித்! விஷ்ணு விஷால் செய்த சம்பவம்

Published on: January 27, 2024
ajith
---Advertisement---

Lal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கேமியோ ரோலிலும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் லால்சலாம். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

நேற்றுதான் லால் சலாம் படத்திற்கான இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரையுலைகை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தம்பி ராமையா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரும் வந்து விழாவை சிறப்பித்தார்.

இதையும் படிங்க: நமக்கு சோறு போட்டவருக்கா இந்த நிலைமை?.. இயக்குனரின் நிலை கண்டு கண்கலங்கிய தயாரிப்பாளர்

எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற மூத்த இயக்குனர்களும் வந்து மேடையை அலங்கரித்தனர். அனைவரும் எதிர்பார்த்த அந்த ஒரு விஷயம் நேற்று லால்சலாம் மேடையில் அரங்கேறியது. நீண்ட நாள்களாகவே இருந்த விஜய் – ரஜினி பிரச்சினைக்க்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் இதை முதலில் விஜய்தான் செய்திருக்க வேண்டும்.

பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான் என ரஜினி நிரூபித்திவிட்டார். விஜய் என் கண் முன்னால் வளர்ந்த பையன். அவரை எப்படி போட்டியாக பார்க்க முடியும்? அப்படி நினைத்தால் அது எனக்கு மரியாதையாக இருக்காது. என்னையும் அவர் போட்டியாக நினைத்தால் அவருக்கும் அது மரியாதையாக இருக்காது என சரியாக பேசினார்.

இதையும் படிங்க:விஜயகாந்த் நடிக்க மறுத்த 15 திரைப்படங்கள்!.. அவருக்கு பதில் நடித்த நடிகர்கள் யார் தெரியுமா?..

இந்த நிலையில் படத்தில் முக்கிய நாயகனாக இருக்கும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் மேடையில் ஏறி பேசும் போது அவர்களிடம் ‘தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் யார் உங்களுக்கு கோச்சாக வந்தால் நன்றாக இருக்கும்?’ என்ற கேள்வியைக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஷ்ணுவிஷால் அஜித் பெயரை கூற ஒரு பத்து நிமிடம் அரங்கமே ஆரவாரத்துடன் இருந்தது.

மேலும் அஜித் மிகவும் டீசண்டாக அமைதியாக இருந்து வேலை வாங்குவார். அதனால் அவர் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறி மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதையும் படிங்க: இது படமா? வாமிட் வர அளவுக்கு கோவம் வருது.. வைரலாகும் ராதிகாவின் பதிவு! என்னப் படம் தெரியுமா