மறைந்தும் மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விவேக். சின்னக்கலைவாணர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விவேக் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களின் நலனுக்காகவே வாழ்ந்திருக்கிறார். கூட நடிக்கும் சக நடிகர்களின் மீதும் அதிக அக்கறை கொண்டவராகவே இருந்திருக்கிறார்.
ஒட்டுமொத்த இந்திய மக்களின் அபிமானங்களை பெற்ற அப்துல்கலாமின் மனதையே வென்றவர் விவேக். அதன் காரணமாகவேதான் தான் எண்ணியிருந்த அந்த ஒரு செயலை விவேக் மூலமாக நிறைவேற்றினார் அப்துல்கலாம். அவருடைய எண்ணமே மரங்களை நடுவது மட்டுமே.
இதையும் படிங்க : கேப்டன் என்னை பொண்ணு பாக்க வரும்போது இதுதான் நடந்தது!.. – பிரேமலதா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!…
இதை படங்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த ஒரு பொறுப்பை விவேக்கிடம் கொடுத்தார் அப்துல்கலாம். இந்த செயலாலும் விவேக் ஒட்டுமொத்த இந்திய மக்களிடம் ஒரு பெருமை மிகு நடிகராக காணப்பட்டார்.
விஜய், அஜித் இவர்களுக்கு நண்பனாகவும் மற்ற முன்னனி நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரமாகவும் நடித்து வந்த விவேக் இடையிலேயே ஹீரோவாக ஒரு சில படங்களில் தோன்றினார்.
பெரும்பாலும் இவர் நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் வடிவேலு நிராகரித்தவையாகவே இருந்திருக்கும். அந்தளவுக்கு வடிவேலுவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது விவேக் இன்னும் உயிருடன் சில காலம் இருந்திருக்கலாம் என்றே அவருடன் நடித்த சக நடிகர்கள் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: தெரியாத தொழில தொட்டான் கெட்டான்… முடியவே முடியாது சொன்ன தேவா.. அடம் பிடித்த தனுஷ்!
எல்லா நடிகர்களுடனும் நடித்த விவேக் கமலுடன் மட்டும் சேர்ந்து நடித்ததே இல்லை. ஆனால் எப்படியாவது அதுவும் நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் இருந்த விவேக்கிற்கு கிடைத்ததுதான் இந்தியன் 2 படத்தின் வாய்ப்பு.
அந்தப் படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்திருக்கிறாராம் விவேக். அந்தப் படம் வெளிவரும் போதுதான் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது தெரியவரும். நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதை பார்க்கமலேயே சென்று விட்டார் விவேக் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
கங்குவா திரைப்படத்தை…
Chinmayi: தமிழ்…
தென்னிந்திய சினிமாவில்…
Good bad…
Gossip: தமிழ்…