விவேக் இல்லைன்னா அஜித் நிலைமை சங்கு தான்!.. ஓடி வந்து கரம் கொடுத்த சின்னக்கலைவாணர்.. இது லிஸ்ட்லயே இல்லையே!..
தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணராகவே வாழ்ந்து மறைந்தவர் நடிகர் விவேக். சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை தன் நகைச்சுவையான காட்சிகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியவர் நம் விவேக். மேலும் மூடபழக்க வழக்கங்களால் முடங்கி கிடக்கும் மக்களை தன் காமெடி மூலம் தெளிவு படுத்த விரும்பியவர்.
இப்படி பல நல்ல கருத்துக்களாலும் பல நல்ல நல்ல உதவிகளை செய்து வந்ததாலும் மக்கள் இவரை தங்கள் வீட்டு பிள்ளையாகவே பார்க்க ஆரம்பித்தனர். மேலும் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஐயா அப்துல்கலாம் அன்பை வெகு சீக்கிரமாக பெற்றவர். இவரின் நல்ல உள்ளத்தை பார்த்து மரம் நடுவிழா பற்றிய விழிப்புணர்வை நீங்கள் செய்தால் தான் பொருத்தமாக இருக்கும் என அந்த பணியை கொடுத்தார். அதை ஏற்று விவேக் தான் இறக்கும் தருவாய் வரை அந்த பணியை ஏற்று செய்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க : “இனி ஹீரோவா நடிக்கமாட்டேன்”… வடிவேலு எடுத்த அதிரடி முடிவுக்கு டிவிஸ்டு வைத்த விஜய் சேதுபதி…
மேலும் சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகராகவே வலம் வந்தார் விவேக். இன்று பெரிய உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருடனும் ஆரம்பகாலத்தில் இருந்தே கூட இருந்தவர். விஜய் அஜித்தின் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய் அஜித் இருவருக்கும் கல்லூரி நண்பனாக சக தோழராக உள்ள கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே தான் இருந்திருக்கிறார். அதாவது ஆரம்பகாலத்தில் அஜித் ஏகப்பட்ட படங்களில் நடித்து அந்த படங்கள் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்திருக்கின்றன.
இதையும் படிங்க : ரஜினிகாந்த்துடன் இணையும் Come Back இசையமைப்பாளர்… டிவிஸ்டுக்கு மேல டிவிஸ்ட் வைக்குறாங்களே!!
மேலும் ஒரு சில படங்கள் தயாரிக்கவும் செய்தாராம். அதன் மூலம் பல லட்ச ரூபாய் நஷ்டத்தை தழுவியிருக்கிறார் அஜித். அதனால் மற்ற படப்பிடிப்பிற்கு வரும் போது முகம் சோகமாக இருப்பதை விவேக் அறிந்து கேட்டாராம். நடந்ததை சொன்னதும் பதில் எதும் கூறாமல் என்ன ஏது என்று கூட கேட்காமல் உடனே ஒர் கோடி ரூபாய் விவேக் கொடுத்தாராம்.
ஆனால் அஜித் அதை வேண்டாம் என மறுத்தாராம். விவேக் விடாபடியாக கொடுத்து தன் உதவியை செய்திருக்கிறார். ஆனால் பின்னாளில் அஜித் ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் அந்த பணத்தை விவேக்கிடம் திரும்பி கொடுத்துவிட்டாராம். இந்த தகவலை விவேக்கின் மேக்கப் மேன் மூலம் அறிந்து மீசை ராஜேந்திரன் கூறினார்.