அஜித்தை காப்பாற்றிய அந்த ஒரு கோடி… யார் கொடுத்தான்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!
தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக திகழ்ந்து ‘தல’யாக உயர்ந்தவர் அஜித். அஜித் பல காலமாக தன்னுடைய திரைப்படங்களுக்கு கூட பிரோமோஷன் செய்வதில்லை. ஆனால் அவரது மார்க்கெட் என்றுமே இறங்கியது இல்லை.
கடல் போன்ற ரசிகர் கூட்டத்தை தனது கைக்குள் வைத்திருக்கும் அஜித், தொடக்க காலத்தில் இளம்பெண்களுக்கு மிகவும் பிடித்த கனவுக்கண்ணனாக திகழ்ந்தார். “அமர்க்களம்” திரைப்படத்திற்கு பிறகு ஒரு மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்தார். தற்போது வரை மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
அஜித் தற்போது “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவருவதால் பல ஆண்டுகள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் மோத உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில் அஜித் கேரியரின் தொடக்க காலத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் அவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவியதை தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் மீசை ராஜேந்திரன்.
அதாவது அஜித் நடிக்க வந்த தொடக்க காலத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அஜித்திற்கு அவசியமாக பணம் தேவைப்பட்ட நிலையில் நடிகர் விவேக் இதனை அறிந்து, அவரே அஜித்தை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து மீசை ராஜேந்திரன் அப்பேட்டியில் கூறியபோது “அஜித் தனது கேரியரின் தொடக்க காலத்தில் பெரும் பிரச்சனையில் இருந்தார். அப்போது விவேக் என்ன ஏது என்று கேட்காமலே அஜித்திடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து ‘எப்போது கொடுக்கமுடியுமா, அப்போது திருப்பி கொடுங்கள் போதும்’ என கூறினார்.
எந்த வித எழுத்துப்பூர்வ ஆதாரமும் இல்லாமல் அஜித் மீது இருக்கும் நம்பிக்கையை வைத்து மட்டுமே விவேக் ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். இது மிகப்பெரிய விஷயம்” என பேசியுள்ளார். இருவரின் நட்பும் ரசிகர்களை வியக்க வைக்கிறது.