சினிமாலதான் காப்பினா அரசியல்லயுமா?!.. விஜய் பேசின பன்ச் வசனம் அவர் சொன்னதா!…

by சிவா |   ( Updated:2025-03-29 06:03:59  )
vijay
X

#image_title

TVK Vijay: கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். வாரிசு படத்தில் நடிக்கும்போதே விரைவில் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்து அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனாலும், அவர் அரசியலுக்கு வந்து முதல்வராக வேண்டும் என்கிற ஆசை அவரின் ரசிகர்களுக்கு இருப்பதால் விஜய் அரசியலுக்கு வருவதில் அவர்களும் ஆர்வம் காட்டினார்கள்.

வாரிசு படம் முடிந்த பின்னர் சென்னை விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தினார் விஜய். அந்த மேடையில் மக்கள் விரோத ஆட்சி, கரப்ஷன் கபடதாரிகள் என ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். விஜய் அப்படி பேசுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. மேலும், தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் என அறிவித்தார்.

மேலும், கட்சியின் முதலாமாண்டு விழா மற்றும் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். மன்னாராட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. இந்த ஆட்சியை பெண்கள்தான் மாற்ற போகிறார்கள். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெயரை வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் இருக்க வேண்டும். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டியே என பேசினார்.

#image_title

இதற்கு திமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். தமிழக அரசியலில் எங்கள் தலைவர் ஸ்டாலினுக்கு போட்டியே இல்லை. முந்தாநாள் கட்சி துவங்கிய விஜய்க்கெல்லாம் பதில் சொல்ல முடியாது எனவும் சொன்னார்கள். தவெக பொதுக்குழுவில் பேசிய விஜய் ஆங்கிலத்தில் ஒரு வசனம் சொன்னார்.

அதாவது ‘Men may come and men go go. But i go on forever' என்பதுதான் அந்த வசனம். உண்மையில் அந்த வசனத்தை சொன்னது Lord Tennyson என்பவர்தான். ஆனால், விஜய் வேறு ஒரு பெயரை சொன்னார். இதை வைத்தே திமுகவினர் அவரை ட்ரோல் செய்தனர். இந்நிலையில்தான் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பவன் கல்யாண் இதே வசனத்தை சொன்னார். தற்போது விஜயும் அதை சொல்லியிருக்கிறார். எனவே, பவன் கல்யாணிடமிருந்து விஜய் காப்பி அடித்திருக்கிறார். தெலுங்கு படங்களை காப்பி அடித்து படம் நடித்த விஜய் இப்போது அரசியல் மேடைகளில் பேசும் வசனங்களையும் காப்பி அடிக்க துவங்கிவிட்டார்’ என விஜயை பிடிக்காதவர்கள் ட்ரோல் செய்ய துவங்கிவிட்டார்கள்.

Next Story