உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாத நடிகர்கள்... நீங்களாம் கருத்து சொல்லலாமா?..
தமிழகத்தில் நேற்று ஊரக, நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது.
பொதுவாக தேர்தல் என்றாலே பிரபலங்கள் ஒட்டுப்போட வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் செய்திகளாக மாறும். நேற்று காலை நடிகர்களில் முதல் நபராக நடிகர் விஜய் நீலாங்கரையில் வாக்களித்தார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலானது. நடிகர் ரஜினி போயஸ் கார்டனில் இருந்து ஓட்டு போட வருகிறார் என செய்திகளும் வெளியானது. ஆனால், அதன்பின் அவரை பற்றிய செய்திகள் வெளிவரவில்லை.
அதேநேரம் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் வாக்களித்தனர். பொதுவாக நடிகர் அஜித் தனது மனைவியுடன் வாக்களிக்க வருவார். ஆனால், இந்த முறை அவர் வாக்களிக்க வரவில்லை. அதேபோல், நடிகர் ரஜினியும் வாக்களிக்க செல்லவில்லை.
அவர்கள் மட்டுமல்ல, தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, சிவகார்த்திகேயன், திரிஷா, வடிவேலு, விஷால் என பல நடிகர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற செல்லவில்லை.
வீட்டில் இருந்து கொண்டே இவர்கள் எல்லாம் வாக்களிக்க வரவில்லை. இவர்கள்தான் திரையில் மக்களுக்கு கருத்து சொல்கிறார்கள் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.