எம்.ஜி.ஆரை கண்ணீர் சிந்த வைத்த திரைக்கதை... நடிக்க முடியாமல் போன சோகம்... என்ன படம் தெரியுமா?

by Akhilan |   ( Updated:2022-10-15 07:04:51  )
எம்.ஜி.ஆர்
X

எம்.ஜி.ஆர்

பிரபல பாடலாசிரியரான மருதகாசி முதன் முறையாக தயாரித்த படம் ‘அல்லி பெற்ற பிள்ளை’. இப்படம் தோல்வியை தழுவியதை அடுத்து அவர் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கினார். அவரை காப்பாற்ற எண்ணிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது கதை ஒன்றினை அவருக்கு கொடுத்து படமெடுக்க கூறினார். அதை படித்த மருதகாசி இப்படம் கண்டிப்பாக வெல்லும் என நினைத்தார். படத்திற்கு கதை, வசனம் எழுத கே.எஸ்.கோபாலகிருஷ்ணனையே நாடினார்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

அக்கதைக்கு கற்பகம் எனப் பெயர் வைக்கப்பட்டது. படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இருந்தும் மருதகாசியின் முதல் பட தோல்வி பிரச்சனை அவரை தொடர்ந்து துரத்தியது. இதனால் பிஸியாக இருந்த சிவாஜி கால்ஷூட்டும் பறிபோனது. தொடர்ந்து, கோபால கிருஷ்ணன் உதவியால் எம்.ஜி.ஆரிடன் இப்பட கதையினை கூறி இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆருக்காக சிறு சிறு மாற்றம் செய்து அக்கதையை கோபாலகிருஷ்ணனே கூறினார். இரு மனைவி கதை, முதல் மனைவி இறப்பு என அவர் சொல்லிக்கொண்டே செல்ல எம்.ஜி.ஆருக்கு தனது வாழ்க்கை நினைவுக்கு வந்திருக்கிறது. அதனால் அவர் கண் கலங்கி விட்டார். தொடர்ந்து, இரண்டாம் பாகத்தினை இன்னொரு நாள் கேட்கிறேன். ஆனால் எனக்கு இப்படத்தில் நடிக்க சம்மதம் எனக் கூறினாராம்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு தரமான செய்கையை செய்த ஜெமினி கணேசன்.. அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா??

படத்தின் ஒரு காட்சியினை மட்டும் படமாக்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழு இருந்தது. இதற்காக இயக்குனரையும், படத்தின் முக்கிய கேரக்டரையும் தேர்வு செய்தனர். இது இரண்டுமே கதை எழுதிய கோபாலகிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை. படப்பிடிப்பில் தலையிடாமல் தள்ளியே இருந்தார். அவரை அழைத்து எம்.ஜி.ஆர் கேட்க தனது மனக்குமுறலை கூறினாராம். சரி உனது விருப்பம் போல ரங்காராவினையே மாமனார் வேடத்தில் நடிக்க வைக்கலாம் என எம்.ஜி.ஆர் வாக்கு கொடுத்திருக்கிறார்.

ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசன்

ஆனால், அதன் பிறகு இப்படம் துவங்கப்படாமலே இருந்தது. கோபால கிருஷ்ணன் இதுகுறித்து தயாரிப்பாளர் மருதகாசியிடம் கேட்டார். அவர் தனது நிதி நெருக்கடியால் தன்னால் இப்படத்தினை தயாரிக்க இயலாது எனக் கூறினாராம். விநியோகஸ்தர்களிடம் மருதகாசி வாங்கியிருந்த பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டார் கோபாலகிருஷ்ணன். அந்தக் கதையின் உரிமையை திரும்பப் பெற்று அவரே படத்தினை எடுத்தார். ஆனால், இந்தமுறை எம்.ஜி.ஆரும் இல்லை. அவருக்கு பதில் அப்படத்தில் ஜெமினி கணேசன் நாயகனாக நடித்தார். வசூலில் அந்த காலத்தில் பெரிய சாதனையை இப்படம் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story