More
Categories: Cinema History Cinema News latest news

12 வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்த முதல் நடிகர்… சிவாஜி இல்லை…

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பல வேஷம் போடுவது புதிது இல்லை. இப்போதைய டெக்னாலஜியில் அதுவெல்லாம் சாதாரணம் தான். ஆனால், 70களில் சிவாஜி 9 வேடத்தில் நடிக்கும் முன்னரே 12 வேடம் ஒரு நடிகர் போட்டு இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

நம்பியார்-சிவாஜி

கோலிவுட்டில் வெளியான படம் நவராத்திரி. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்திருப்பார். அப்படத்திற்கு சில வருடங்கள் முன்னரே நம்பியார் 12 வேடத்தில் நடித்து விட்டார். ஆனால் அவருக்கு இந்த வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. நாவலாசிரியர் ‘வடுவூர் துரைசாமி ஐயங்கார்’ எழுதிய புகழ் பெற்ற துப்பறியும் நாவல் ‘திகம்பரச் சாமியார்’. அப்பெயரிலே மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் ஒரு படத்தினை தயாரிக்க முடிவெடுத்தனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: உலகம் முழுவதும் பிரமிப்பை ஏற்படுத்திய செவாலியே சிவாஜியின் நவராத்திரி

டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான ‘திகம்பர சாமியார்’ படத்தில் நாயகனுக்கு 12 வேடங்கள். இப்படத்திலே நடிக்கின்ற வாய்ப்பு முதலில் எம்.ஜி.ஆரின் நாடக மேடை குருவான காளி என்.ரத்தினத்தைத்தான் தேடிப் போனது. அதைத் தொடர்ந்து, படப்பிடிப்புகள் துவங்கியது. காளி.என்.ரத்தினம் ஒரு வாரம் நடித்தார்.

இயக்குனர் டி.ஆர். சுந்தரத்திற்கு நாயகன் மீதி திருப்தி இல்லாமல் அந்தப் படத்தை எடுத்தவரையில் போட்டுப் பார்த்தார். பெரிதாக படம் அவரை ஈர்க்கவில்லை. அவரை படத்தில் இருந்து நீக்கினார். அடுத்து, எம்ஜிஆரின் மூத்த சகோதரரான எம்.ஜி.சக்ரபாணிக்கு இந்த வாய்ப்பு சென்றது. அவருடைய நடிப்பும் சுந்தரத்துக்கு திருப்தி தராமல் போனது.

நம்பியார்

அதை தொடர்ந்தே, திகம்பர சாமியார் படத்தில் நம்பியார் ஒப்பந்தம் ஆனார். 12 வேடங்களில் சில வேடங்களை அவருக்கு டெஸ்ட் ஷூட்டிற்காக போட்டு பார்த்தார். அவருக்கு அந்த வேடங்கள் கச்சிதமாக பொருந்தியது. அப்படத்தில் அவரின் நடிப்பினை பார்த்த இயக்குனர் “இனிமேல் இந்த சினிமா உலகில் உன்னைப் பிடிக்க முடியாது” என்று சொல்லி நம்பியாரைப் பராட்டினார்.

Published by
Akhilan

Recent Posts