ஷங்கரின் ‘வேள் பாரி’...1000 கோடி பட்ஜெட்...ஹீரோ யார் தெரியுமா?....

by சிவா |
shankar
X

ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி வெளிவந்து மெகா ஹிட் அடித்து பல கோடிகள் வசூல் செய்துள்ள நிலையில், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்திலும் சரித்திர திரைப்படங்கள் எடுப்பதின் மீது ஆர்வம் திரும்பியுள்ளது.

kgf1_cine

கன்னடத்தில் வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப்2 இரண்டு திரைப்படங்களும் வசூலில் சக்கை போடு போட்டது. அதேபோல் பாலிவுட்டிலும் சரித்திர கதை கொண்ட திரைப்படங்கள் வெளியானது. ஆனால், அப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

pos

தமிழை பொறுத்தவரை மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக உருவாக்கி வருகிறார். இதில் முதல் பாகம் வருகிற 31ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தமிழில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் ஷங்கரின் பார்வை ‘வேள் பாரி’ நாவல் மீது திரும்பியுள்ளது. இந்த நாவலை எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதியிருந்தார்.

vel pari

இப்படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி பிடிக்கும் என்பதால் நிறைய தயாரிப்பாளர்களை உள்ளே கொண்டுவர ஷங்கர் முடிவெடுத்துள்ளார். பிரபல ஓடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸ் மற்றும் பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர்.

அதோடு, மேலும் ஒரு பாலிவுட் தயாரிப்பாளரும் இதில் இணையவுள்ளார் எனக்கூறப்படுகிறது. இப்படத்தில் கேஜிஎப் பட ஹீரோ யாஷ் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. சமீபத்தில் ஷங்கரும், யாஷும் நேரில் சந்தித்து இப்படம் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.

ஹாலிவுட்டை போல் தமிழில் அதிக பட்ஜெட்டில் சரித்திர திரைப்படங்கள் உருவாக துவங்கியிருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story