எம்மாம் பெரிய நடிகர்....அந்த மாறி படங்கள்ல நடிக்க மாட்டார்..கேஜிஎஃப் பட தயாரிப்பாளர் பேட்டி...!
சமீபத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஏன் உலகத்தையும் பிரமிக்க வைத்த படம் கே.ஜி.எஃப். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது. அப்பவே திரைபிரபலங்கள் பீதியில் இருந்ததை போலவே இருந்தார்கள். அந்த அளவிற்கு அனைவர் மனதிலும் ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் வெளியாகி அனைவரையும் வாயடைக்க வைத்துவிட்டார் கே.ஜி.எஃப் பட இயக்குனர பிரசாந்த் நீல். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் என்னென்ன உத்திகள், தொழில்முறைகள், வசனங்கள் என அனைத்திலும் பிரமிப்பை உண்டாக்கினார். இந்த மாதிரி படம் இன்னும் யாரேனும் எடுக்க முடியுமா? என கெத்தாக வந்து மக்கள் முன் வந்து நின்னார் இயக்குனர்.
அவர் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அந்த படத்தில் நடித்த நடிகர் யாஷ். சாதாரண நடிகராக நடிக்க வந்தவரை இன்று உலகமே போற்றும் மாபெரும் நடிகராக மாற்றி விட்டது கே.ஜி.எஃப் படம். அவர் ஸ்டைல், நடிப்பு, பேசிய வசனங்கள் எல்லாம் படம் பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
இந்த நிலையில் கே.ஜி.எப் படத்தின் தயாரிப்பாளர் ஒரு அறிக்கையில் “ இனி நடிகர் யஷ் பேன் இந்தியா படங்களில் மட்டுமே நடிப்பார். அவர் இன்று எல்லோராலும் மதிக்கப்படுகிற மாபெரும் நடிகராக வளர்ந்து விட்ட நிலையில் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க மாட்டார்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடிகர் யஷின் பக்கம் எந்த வித அறிவிப்பும் வரவில்லை.