பல மொழிகள் தெரிந்த உலகநாயகன்! இவருக்கு குரல் கொடுத்தது ஒய்.ஜி.யா? என்ன படம் ஏன்னு தெரியுமா

Actor Kamalhasan: தமிழ் சினிமாவில் ஒரு சரித்திரம் படைத்த மகா கலைஞனாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவை பற்றியும் அதில் இருக்கும் நுணுக்கங்களை பற்றியும் அணு அணுவாக தெரிந்து வைத்திருப்பவர். கேமிரா வைப்பதில் இருந்து அத்தனை நுட்பங்களை பற்றியும் கறைத்து குடித்திருப்பவர்.

சினிமா சம்பந்தப்பட்ட எதாவது ஒரு தொழில் நுட்பம் புதியதாக வெளியாகிறது என்றால் கோலிவுட்டில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவராக எப்போதும் கமல் இருப்பார். இருந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: மகாபாரதம் படத்தில் இந்த தமிழ் ஹீரோ நடிக்கிறார்!… சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட பிரபலம்

அதுமட்டுமில்லாமல் நடிகர்களில் பல மொழிகள் தெரிந்த நடிகராகவும் கமல் இருக்கிறார். மற்ற மொழி சினிமாக்களில் நடிக்கும் போது கமலே டப்பிங் பேசியும் நடிப்பாராம். ஆனால் அவர் நடித்த ஒரே ஒரு படத்தில் மட்டும் கமலுக்கு குரல் கொடுத்தது ஒய்.ஜி.மகேந்திரனாம்.

அந்த படத்தின் பெயர் ‘இரு நிலவுகள்’. இந்த படத்தில்தான் கமலுக்கு ஒய்.ஜி குரல் கொடுத்திருக்கிறாராம். இதை பற்றி சித்ரா லட்சுமணனிடம் கேட்டபோது இரு நிலவுகள் திரைப்பட நேரடி தமிழ் படமாம். தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டு எடுத்தார்களாம். அதன் காரணமாகவே தான் கமலுக்கு ஒய்.ஜி குரல் கொடுத்திருந்தாராம்.

இதையும் படிங்க: வீக் எண்டுக்கு இது செம ட்ரீட்டு!.. ரிப்பீட் மோடில் ரசிக்க வைக்கும் ரித்திகா சிங்…

1979 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கமல்ஹாசன், ரோஜா ரமணி, ஜெயசுதா போன்றோர் நடித்திருந்தனர். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான இந்த படம் தெலுங்கில் 'சொம்மோகடிடி சோக்கோகடிடி’ என்ற பெயரில் ரிலீஸானது. அதை அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். கவிஞர் வாலியின் வரிகளில் வெளியான இந்த படம் 100 நாள்களை கடந்து ஓடியதாம்.

 

Related Articles

Next Story