என் கால்ஷீட் வேணுமா?..இத செய்யுங்க.. கண்டீசன் போட்டு படப்பிடிப்பிற்கு வரும் யோகிபாபு..
தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகருக்கு இணையாக மார்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகராக நடிகர் யோகிபாபு திகழ்கிறார். அதுவும் சந்தானம் ,சூரி போன்றோர் ஹீரோவாக களமிறங்கியதால் நகைச்சுவை நடிகர்களின் இடத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
அதன் காரணமாகவே யோகிபாபுவின் கால்ஷீட் எல்லையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் எப்படி நாகேஷின் கால்ஷீட்டிற்காக பல முன்னனி நடிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்களோ அதே நிலைமைதான்
இப்பொழுது யோகிபாபுவின் விஷயத்திலயும் நடக்கிறது.
இந்த நிலையில் தான் நடிக்கும் படங்களில் கண்டீசன் போட்டே நடிக்க வருகிறாராம் யோகிபாபு. அதாவது உள்ளூரில் சூட்டிங் என்றால் பக்கத்த்தில் இருக்கும் இடங்களில் படப்பிடிப்பை நடத்த சொல்கிறாராம். அதாவது சென்னையில் படப்பிடிப்பு என்றால் எந்தெந்த ஏரியா அவருக்கு அருகாமையில் இருக்கிறதோ அங்கு வைக்கச் சொல்கிறாராம்.
அப்பொழுது தான் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது இன்னொரு படத்தின் படப்பிடிப்பிற்கு எளிதாக போக முடியும் என்பதற்காக இந்த கண்டீசனை போட்டிருக்கிறாராம். இந்த நிலையில் எண்ணூரில் படப்பிடிப்பு வைத்திருந்தனராம்.
அப்போது தாமதமாக யோகிபாபு போக படக்குழு ஏன் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு யோகிபாபு இதற்கு தான்
பக்கத்தில் இருக்கும் ஏரியாவில் படப்பிடிப்பை நடத்தச் சொன்னேன் என்று கூறினாராம். இருந்தாலும் மனுஷனுக்கு
இருக்கும் குசும்பு இருக்கே!..