எல்லா ஏரியாலயும் அண்ணன் கில்லி! ஹீரோயினாக மாறிய யோகிபாபு - ஹீரோ யாருனு தெரியுமா?

by Rohini |   ( Updated:2023-07-29 07:56:56  )
yogi
X

yogi

தமிழ் சினிமாவின் ஐகானிக் காமெடி நடிகராக மாறியிருப்பவர் நடிகர் யோகிபாபு. வடிவேலு, விவேக் இடத்தை இப்போது யோகிபாபுதான் நிரப்பிக் கொண்டிருக்கிறார். வடிவேலுவின் காமெடி பழைய மாதிரி எடுபட வில்லை. மாமன்னன் திரைப்படத்தின் மூலம் இனிமேல் எப்படி நடிக்கப் போகிறேன் என்று மறைமுகமாக சொல்லிவிட்டார் வடிவேலு.

yogi1

yogi1

விவேக் இறந்த பிறகு சூரி, சந்தானம் காமெடியில் களமிறங்கினார்கள். இதில் சூரி விடுதலை படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் சூரியும் காமெடி பண்ண மாட்டார் என தெரிகிறது. சந்தானம் ஏற்கெனவே ஹீரோவாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : அடுத்த படத்திற்கு வாய்ப்பு கேட்டு ஐஸ் வைக்கிறார் சரிதா.. ஏற்கனவே அவருக்கு 4 கணவர்கள்.. கோபத்தில் வெடித்த பயில்வான் ரங்கநாதன்

இந்த சம்பவங்கள் அனைத்தும் யோகிபாபுவுக்கு சாதகமாக அமைந்தது. நகைச்சுவை என்ற இடத்தை மொத்தமாக வாங்கிக் கொண்டார் யோகிபாபு. ஓய்வில்லாமல் கிடைக்கும் அத்தனை பட வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார்.

yogi2

yogi2

கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்த யோகிபாபு ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த லொள்ளு சபா நிகழ்ச்சியில் ஒரு ஓரமாக பார்க்கும் ரசிகர்கள் கூட்டத்தில் தான் இருந்தார் யோகிபாபு.

அவரின் தோற்றம், பயங்கரமான முகம் என வெள்ளித்திரையில் ரவுடி கூட்டத்தில் ஒருவனாக நிறுத்தியது. பல படங்களில் ரவுடியாக நடித்திருப்பார் யோகிபாபு. அதன் பிறகுதான் காமெடி நடிகராக மாறினார். இப்படி தொடர்ந்து நகைச்சுவையில் பின்னி பிடலெடுத்து வரும் யோகிபாபு ஒரு புதிய படத்தில் லேடி கெட்டப்பில் நடிக்கிறாராம்.

yogi3

yogi3

அதுவும் ஆங்கிலோ இந்தியன் லேடியாக படமுழுக்க வருகிறாராம். மிஸ் மேகி என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் கதையின் நாயகியே யோகிபாபுதானாம். மேலும் படத்தில் ஹீரோவாக மாதம்பட்டி ரெங்கராஜ் நடிக்கிறாராம். இவர் ஒரு இந்திய சமையல் நிபுணராம். நடிகராகவும் இருக்கிறாராம். இந்தப் படத்தை செல்வராகனின் உதவியாளர் லதா என்பவர்தான் இயக்குகிறாராம். டிரம்ஸ்டிக் புரடக்‌ஷன் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்க இருக்கிறதாம்.

இதையும் படிங்க : சூப்பர் ஸ்டார் சர்ச்சையே இன்னும் ஓயல! அதுக்குள்ள ‘லக்கி சூப்பர் ஸ்டாரா’? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

Next Story