தைரியமான நடிகர் என்றால் அது சிம்பு தான்.... திடீரென சிம்புவை புகழ்ந்த நடிகர்...!
ஒரு சமயத்தில் கோலிவுட்டில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். ஆனால் சமீபகாலமாக அவருக்கு மார்க்கெட் இல்லாததால் பட வாய்ப்புகள் குறைந்து தவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பெட். சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஸ்ரீகாந்த், "இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரஸ்மீட் வைக்க வேண்டுமா என்கிற தயக்கம் என்னிடம் இருந்தது. எல்லாருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது. ஹேட்ஸ் ஆப் சிம்பு. ஏனென்றால் பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அந்த இயக்குனரிடம் மொத்தமாக தன்னை ஒப்படைத்து விடுவார். சிலர் வேறு மாதிரி கதையை குழப்பினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார். அந்த அளவிற்கு திறயையான நடிகர்.
மேலும் படங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கும்போது சில விஷயங்களில் நம் யோசனையை சொல்வோம். அது ஒரு நடிகர் என்று இல்லாமல் பார்வையாளரின் கண்ணோட்டத்திலும் இருக்கும். எல்லா இயக்குனர்களும் அவர்கள் மனதில் கதையை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்களோ அப்படித்தான் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
ஆனால் படம் வெளியான பிறகு உண்மையான வெற்றி பார்வையாளர்களிடம் இருந்து தானே கிடைக்கும். அதனால் ஹீரோக்கள் சொல்லும் சில விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை" என கூறியுள்ளார். திடீரென நடிகர் சிம்புவை ஸ்ரீகாந்த் புகழ்ந்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.