சினிமாவை விட்டே போறேன்னு சொல்லிட்டு யூடர்ன் அடித்த திரை பிரபலங்கள்!.. ஆனாலும் சூப்பர் ஹிட்டுதான்!..
Kamalhaaasan: சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து நடிக்க துவங்கி பிரபலமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி பல வருடங்கள் அதை தக்கவைப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. உழைப்பு மட்டும் போதாது. எல்லாம் சரியாக அமைய வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் கதைகள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்க வேண்டும். திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும். சினிமாவில் வெற்றிகள் மட்டுமே கண்காணிக்கப்படும். தொடர் தோல்வியை கொடுத்தால் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் யாரும் சீண்டமாட்டார்கள்.
இதையும் படிங்க: அந்த விவகாரத்திற்கே காரணம் சோபிதாதான்… வெளியான வைரல் புகைப்படம்…
அதேநேரம், அப்படி கிடைத்த இடத்தை விட்டுவிட்டு சினிமாவை விட்டே போகிறேன் என சொல்லி விட்டு, அப்படி செய்யாமல் மீண்டும் நடிக்க துவங்கி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சில நடிகர், நடிகைகள் பற்றி பார்ப்போம். இதில் முதலிடத்தில் ரஜினி இருக்கிறார். 30 வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி ஆன்மிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆசைப்பட்டார்.
ஆனால், அவரின் மனதை அவரின் குரு இயக்குனர் பாலச்சந்தர் மாற்றினார். இப்போது ஜெயிலர், வேட்டையன், கூலி என கலக்கி கொண்டிருக்கிறார். அடுத்து, அவரின் நண்பரும், சக நடிகருமான கமல்ஹாசனும் ‘இந்தியன் 2 என்னுடைய கடைசிப்படம். அதன்பின் அரசியலுக்கு போகப்போகிறேன்’ என சில வருடங்களுக்கு முன்பே சொன்னார் கமல்.
ஆனால், அரசியலில் வெற்றி கிடைக்கவில்லை. மேலும் விக்ரம் படம் சூப்பர் ஹிட் அடித்தால் கல்கி, தக் லைப், இந்தியன் 3 என மீண்டும் பிஸி ஆகிவிட்டார். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்த நயன்தாரா தெலுங்கில் வெளியான ராம ராஜ்யம் படத்தோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு அப்படிப்பட்ட கெட்டபுத்தி கிடையாது… எஸ்.வி.சேகர் சொன்ன சூப்பர் தகவல்
ஆனால், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் ராஜா ராணி படம் மூலம் கம் பேக் கொடுத்து மீண்டும் ஒரு ரவுண்டு வந்தார். இன்னும் சொல்லப்போனால், அதன்பின்னர்தான் அவர் லேடி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்து இப்போது 2 குழந்தைகளுக்கும் அம்மா ஆகிவிட்டார்.