மனோஜ் நடித்த அந்த படம்!. மூணு பேருமே இப்ப உயிரோடு இல்லையே!.. சோகங்கள்!…

#image_title
இயக்குனர் இமயம் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்தான் பாரதிராஜா. தேனி மாவட்டத்தில் பிறந்த இவர் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தில் அரசு வேலையை விட்டு சினிமாவுக்கு வந்தவர். சென்னை வந்து சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். அதன்பின் நாடகங்களை போடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
ஒருவழியாக பதினாறு வயதினிலே என்கிற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து படங்களை இயக்கினார். சிகப்பு ரோஜக்கள், மண் வாசனை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, மண் வாசனை, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் இவர்.
இவரின் மகன் மனோஜை தாஜ்மகால் படம் மூலம் நடிகராக அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், என்ன காரணமோ, மனோஜை ஒரு நடிகராக மக்கள் ஏற்கவில்லை. அவரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து பார்த்தார். ஆனால், வொர்க் அவுட் ஆகவில்லை. சரி இயக்குனராகலாம் என ஆசைப்பட்டு ஷங்கர் போன்ற இயக்குனர்களிடம் வேலை செய்தார்.
எந்திரன் படத்தில் இரண்டு ரஜினி வரும் காட்சிகளில் ஒரு ரஜினியாக நடித்தவர் மனோஜ்தான். ஒருவழியாக மார்கழி திங்கள் என்கிற கதையை எழுதி படத்தை இயக்கினார். அந்த படமும் ஓடவில்லை. இந்த படத்தில் அப்பா பாரதிராஜாவையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்திருந்தார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் திரையுலகில் எல்லோருடம் நட்பாக பழகியவர்தான் மனோஜ். இவர் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என திரையுலகில் உள்ள பலருமே ஆசைப்பட்டனர்.
மனோஜ் நடித்து 2002ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் வருஷமெல்லாம் வசந்தம். இந்த படத்தில் குணாலும் நடித்திருந்தார். இதில் என்ன சோகம் எனில் குணால் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார். மனோஜ் மாராடைப்பில் உயிரிழந்தார். இந்த படத்தை இயக்கிய ரவி சங்கர் என்பவரும் இப்போது உயிரோடு இல்லை.