திரையுலகை பொறுத்தவரை எப்போதும் தீர்க்கப்படாத அல்லது தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை இருக்கிறது எனில் அது நடிகர்களின் சம்பளம்தான். இதை தீர்க்க பல முறை பலரும் முயற்சி எடுத்தும் அது நடக்கவில்லை. ஒரு படம் ஹிட் கொடுத்த ஹீரோக்க்கள் கூட கோடிகளில்தான் சம்பளம் கேட்கும் நிலையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் காலம் வரை அவர்கள் லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கினார்கள். ஆனால், இப்போது முன்னணி நடிகர்களின் சம்பளம் பல கோடிகளாக இருக்கிறது. அதுவும் விஜயின் சம்பளம் ரூ.125 கோடிக்கு சென்றுவிட்டது. ரூ.65 கோடி வாங்கி வந்த அஜித் கூட தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டார்.
சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் ரஜினியோ ரூ.100 கோடியை எப்போதோ தொட்டுவிட்டார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. எனவே, அவரின் சம்பளம் ரூ.80 கோடியாக குறைந்துவிட்டது. அஜித்தின் பழைய சம்பளத்தை விட குறைவாக வாங்கி வந்த நடிகர் கமல் விக்ரம் மெகா ஹிட்டுக்கு பின் அவரும் ரூ.130 கோடி வரை சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியானது.
ரஜினி, விஜய், அஜித், கமல் ஆகியோருக்கு அடுத்து சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் இருக்கிறார்கள். ஒருபக்கம் விஜய் சேதுபதி ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறார். ஆனால், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டி.எஸ்.பி. திரைப்படம் தமிழகத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் இப்படம் வெளியான ஒரு தியேட்டரில் படம் வெளியாகி 2 நாட்களுக்கு ஒரு டிக்கெட் கூட விற்கவில்லையாம். அதேபோல், நியூஸ்லாந்தில் ஒரு காட்சியில் 2 பேர் மட்டுமே இருந்தனராம். ஆனால், இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் ரூ.15 கோடி கேட்கிறார் விஜய் சேதுபதி.
டாக்டர் ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயன் ரூ.35 கோடி சம்பளம் கேட்கிறார். ஆனால், அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் வசூலில் மண்ணை கவ்வியது. மாநாடு என்கிற ஒரு ஹிட்டுக்கு பின் சிம்புவும் ரூ.30 கோடி வரை சம்பளம் கேட்கிறார். தனுஷும் அதே அளவு சம்பளம்தான் கேட்கிறார். அதேபோல், நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்கும் சந்தானம் ரூ.5 லிருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் கேட்கிறார். ஆனால், அவர் நடிக்கும் படங்களும் பெரிய வசூலை பெறுவதில்லை.
இதில் பிரச்சனை என்னவெனில், இவர்கள் எல்லோரும் தோல்வி படங்களை கொடுத்தாலும் சம்பளத்தை குறைக்க தயாராக இல்லை என்பதுதான்.
இதைத்தான் அனைத்து விழாக்களிலும் தயாரிப்பாளர் கே.ஆர்.ராஜன் பேசி வருகிறார். பல தயாரிப்பாளர் தலையை துண்டை போட்டு சினிமாவிலிருந்து சென்றுவிட்டார்கள். அதனால்தான், தங்களுக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளத்தை கொடுக்க திராணி இருக்கும் லைக்கா போன்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு நடிகர்கள் கால்ஷூட் கொடுக்கிறார்கள். தற்போது அஜித்தும் அந்த பட்டியலில் இணைந்துவிட்டர்.
இப்படியே போனால் ஒருகட்டத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் கையில் மட்டுமே சினிமா இருக்கும் நிலை வந்துவிடும் என்பதுதான் கசக்கும் உண்மை..
இதையும் படிங்க: இவங்கள வச்சு ஒரு சம்பவமே பண்ணியிருப்பாரு!.. நல்ல வேளை வெங்கட் பிரபு ‘பொன்னியின் செல்வன்’ படிக்கல!..
Surya: சூர்யா…
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…