சீச்சீ.. அந்த பழக்கமெல்லாம் எங்களுக்கு இல்ல... சத்தியம் செய்யும் டாப் நடிகர்கள்

by Akhilan |
சீச்சீ.. அந்த பழக்கமெல்லாம் எங்களுக்கு இல்ல... சத்தியம் செய்யும் டாப் நடிகர்கள்
X

தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இந்த கெட்ட பழக்கம் எல்லாம் இருக்கும்பா என பரவலாக பேசப்படுகிறது. ஆனாலும், அதில் சிலர் கோடி குடுத்தாலும் இந்த பழக்கத்தை தொடவே மாட்டார்களாம்.

நம்பியார்:

தமிழ் சினிமாவின் டெரர் வில்லனாக இருந்தவர் நம்பியார். அவரை பார்த்தாலே அள்ளும் விடும் அளவு தனது நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்தார். அப்படிப்பட்ட, நம்பியாருக்கு குடிப் பழக்கம் என்பது சுத்தமாக கிடையாதாம். ஏன் அவருக்கு அசைவம் கூட சாப்பிட பிடிக்காது.

அசோகன்:

70ஸ் வில்லனாக நடித்தவர் அசோகன். பல படங்களில் நடித்திருந்த அசோகன், நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு தொழிலும் தனது முத்திரையை பதித்தவர். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான விசுவாசி. இவருக்கும் குடி பழக்கம் என்பது அறவே கிடையாதாம்.

இதையும் படிங்க: தனிக்காட்டு ராஜாக்கள்!..வாழ்க்கையை தொலைச்சு தனிமரமாக இருக்கும் நடிகர்கள்!..

ஜெய்சங்கர்:

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட். இவரின் படத்திற்கு இன்று ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஜெய் சங்கர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். இவருக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது.

சிவகுமார்:

கோலிவுட்டின் 60வது களில் இருந்து சினிமாவில் நடித்து வரும் சிவகுமார். சிறிய வயதில் சினிமாவிற்கு எண்ட்ரியான இவருக்கு அப்போதே இளம் ரசிகைகள் அதிகமாம். இவருக்கு சின்ன கெட்ட பழக்கம் என்பது கிடையாதாம். ஏன் வெற்றிலை கூட போட யோசிப்பாராம்.

பிரசன்னா:

தமிழ் சினிமா நடிகை சினேகாவின் காதல் கணவர். நடிகனா சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்த பிரசன்னாவிற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், அவர் பல படங்களில் வில்லனாக நடித்தார். அது அவருக்கு பெரிய அளவிலான வரவேற்பை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story