RVK
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பைரவி என்ற படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். அவரது மகனும், தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு நடிகர்களுக்குப் பட்டம் கொடுப்பது குறித்து என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
கன்னடத்துப் பைங்கிளி
நடிகர்களுக்குப் பட்டம் கொடுக்குறதை நிறுத்தணும். கர்நாடகாவுல இருந்து வந்ததால ‘கன்னடத்துப் பைங்கிளி’ சரோஜாதேவி.. கேரளாவுல இருந்து வந்தா பசுங்கிளியா, ஆந்திராவுல இருந்து வந்தா வண்ணக்கிளியா? முதல்ல பட்டமே தேவையில்ல. பவர்ஸ்டார்னு சீனிவாசனுக்குப் பட்டம் கொடுத்துருக்காங்க. அவர் நல்ல நடிகர்.
பவர் ஸ்டார்
குணச்சித்திர நடிகர். காமெடி பண்ணுவாரு. அவரை வெறும் சீனிவாசன்னு சொன்னா தெரியாது. பவர் ஸ்டார் சீனிவாசன்னா தான் தெரியும். அவர் என்ன பவரைக் காமிச்சிட்டாரு? இதெல்லாம் மக்களைக் கேலிக்கூத்தா ஆக்குற விஷயம். விஜய் வந்த புதுசுல இளையதளபதி. இப்போ 30 வருஷம் நடிச்சபிறகு தளபதின்னு மாத்திக்கிட்டாரு. அப்படின்னா மெச்சூரிட்டியா ஆகிடுவாரா?
தளபதி
வயசோட மெச்சூரிட்டி எங்கே இருந்து வருதுன்னா அதனோட பொறுப்பு, வயசுக்கான தன்மை இயற்கையா வரணும். பட்டத்தை மாத்துறதனால மெச்சுரிட்டியான நடிகர்னு சொல்லிட முடியாது. சொசைட்டிக்கான எண்ணம் வரணும். நாலு பேருக்கு நல்லது செய்யணும்கற எண்ணம் வரணும். வயது ஆகும்போது இதெல்லாம் தோணனும். பரத் வந்து சின்ன தளபதி. விஷால் வந்து புரட்சித்தளபதி. எல்லாரும் இப்படி தளபதின்னு போட்டுக்குறாங்க.
இப்ப இளையதளபதி இடம் காலியா இருக்கு. அந்த இடத்துக்கு சிவகார்த்திகேயன் வரப்போறதா சொல்றாங்க. அவரை திடீர் தளபதின்னு சொல்றாங்க. விஜய் துப்பாக்கிக் கொடுத்ததால அவர் தளபதியா ஆகிடுவாரா? மக்கள் கொண்டாடுற நடிகரா வரணும். அப்படி வராம துப்பாக்கியைக் கொடுத்துட்டா அவரு விஜய் ஆகிடுவாரா?
உலகநாயகன்
அவரு சிஎம் ஆகிட்டாருன்னா அதுக்கு அப்புறம் சிவகார்த்திகேயன் சிஎம் ஆகிடுவாரா? ரசிகர்கள் செங்கல்வராயன் சீனிவாசன்னு பட்டம் கொடுத்தா ஏத்துக்குவீங்களா? வேணாம்னு தானே சொல்லுவீங்க. அந்த மாதிரி நீங்க வேணாம்னு சொல்லுங்க. நல்லாருந்தா மட்டும் வச்கிக்கிறீங்கள்ல. கமல் இப்ப உலகநாயகன் பட்டத்தை மறுத்தது வரவேற்கத்தக்கது.
ஆனா அவருக்கு 70 வயசுக்கு அப்புறம் தான் இப்படி ஒரு எண்ணமே வந்துருக்குறது ஆச்சரியமா இருக்கு. இது முதல்லயே வந்துருக்கணும். இதுவரைக்கும் பட்டத்தை நல்லா அனுபவிச்சிட்டு இப்ப வேணான்னு சொல்றாரு. ரஜினி சாருக்கே சூப்பர்ஸ்டார் பட்டத்தை விட்டுக்கொடுக்க மனசு இல்லை.
அஜீத்
பைரவி படத்துல தாணுசார் அந்தப் பட்டம் கொடுக்குறப்ப வேணாம்னு தான் சொன்னாரு. அப்புறம் தாணு சார் தான் இருக்கட்டும்னு வச்சிட்டாரு. அப்புறம் அதை விட்டுக்கொடுக்க அவருக்கு மனசு வரல. விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்னு பேச்சு வரும்போது காக்கா, கழுகு கதை எல்லாம் வருது. அவருக்கே அந்தப் பட்டத்தை விட்டுக் கொடுக்கத் தயாரா இல்லை. அஜீத் சாரைத் தான் முதல்ல பாராட்டணும்.
Also read: அடுத்த பிளான் இங்கதான்!… தீயா வேலை பார்க்கும் தனுஷ்?!… பின்ன கையில இவ்ளோ லிஸ்ட் இருக்கே!…
அவரு அப்பவே வேணாம்னு சொல்லிட்டாரு. கமல் சாரு லேட்டா முடிவெடுத்தாலும் பாராட்டணும். அவரைப் பின்பற்றி எல்லா நடிகர்களும் பட்டம் எல்லாம் எனக்கு வேணாம்னு சொல்லணும். அவங்க காசு வாங்கிட்டுத்தான் நடிக்கிறாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…