இது தான் பெஸ்ட் காம்போ.. ‘ஐயப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகும் அந்த பிரம்மாண்ட நடிகர்கள்
மலையாளத்தில் இயக்குனர் சச்சி இயக்கத்தில் வெளிவந்த படமான ‘ஐயப்பனும் கோஷியும்’ திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றது. வெறும் 5 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் 52 கோடி வரை வசூல் சாதனை பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் ப்ரித்விராஜ், பிஜுமேனன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்தனர். மேலும் இந்த படம் தெலுங்கிலு ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. தெலுங்கில் நடிகர் பவன் நடித்திருந்தார். தெலுங்கிலும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : எப்பா தொகுதில வேலையே இருக்காதா?.. உதயநிதி பற்றிய ரசிகரின் கேள்விக்கு சாட்டையடி பதிலளித்த பிரபலம்…
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் உரிமையைஅ ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருந்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தமிழில் யார் நடிக்க போகிறார் என்ற ஆர்வம் அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. தமிழ் நடிகர்களின் சிலர் பெயர்கள் கூட பரிசீலிக்கப்பட்டது.
நடிகர் பார்த்திபன், நடிகர் கார்த்தி, நடிகர் ஆர்யா, நடிகர் சசிகுமார், சரத்குமார், சிம்பு என முன்னனி நடிகர்களின் பெயர்கள் வரிசையாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் கதிரேசன்.
நடிகர் விக்ரம் மற்றும் நடிகர் மாதவன் இவர்கள் தான் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க போகிறார்களாம். அதுவும் கதிரேசன் லாரன்ஸின் ருத்ரன் படத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஐயப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படுகிறதாம்.
இதையும் படிங்க : பிரபாஸுடம் காதலா? ஐய்யோ விட்ருங்க கடுப்படித்த பரமசுந்தரி நடிகை
மேலும் நடிகர் விக்ரம் இப்பொழுது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும் கைவசம் படங்கள் வைத்திருக்கும் விக்ரம் இந்த படத்தின் அப்டேட்கள் பற்றி கூறினால் தான் ஒரு தெளிவான அறிவிப்பு தெரியும்.