தனக்கு ஹிட் கொடுத்த இயக்குனர்களையே கழட்டிவிடும் நடிகர்கள்...யார் மேல தப்பு பாஸ்!...

vijay
சினிமா உலகை பொறுத்தவரை ஓடும் குதிரை மீதுதான் முதலீடு செய்வார்கள். வெற்றி மட்டுமே அங்கே ஒருவரின் அடையாளம். சூப்பர்ஸ்டார் ரஜினியாக இருந்தார்லும் தோல்வி கொடுத்தால் அவரின் மார்க்கெட் மதிப்பு அதள பாதாளத்திற்கு சென்றுவிடும். இது நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

actors
ஒரு சில இயக்குனர்கள் ஒரு நடிகரை தனது கதையில் நடிக்க வைத்து படத்தை ஹிட் கொடுத்து அந்த நடிகரின் கேரியரையே தூக்கிவிடுவார்கள் இன்னும் சொல்லப்போனால் அந்த இயக்குனரின் படத்தில் நடித்த பின்புதான் அந்த நடிகர்களின் சினிமா வாழ்க்கையே மொத்தமாக மாறும். பல தயாரிப்பாளர்களும் அந்த நடிகரை வைத்து படம் எடுக்க வரிசையில் வருவார்கள். அந்த நடிகரின் சம்பளமும் ஏறிவிடும். அதன்பின் அந்த ஹீரோ வெவ்வேறு இயக்குனர்கள் படங்களில் நடித்து ஹிட் கொடுத்துவிடுவார்.
ஆனால், சில வருடங்கள் கழித்து அதே இயக்குனர் மறுபடி அதே ஹீரோவை வைத்து படம் எடுக்க வந்தால் நன்றியுணர்ச்சியில் நடிப்பவர்களும் இருக்கிறார்கள், காத்திருக்க வைப்பவர்களும் இருக்கிறார்கள்.

vijay
நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார். ரசிகன் என்கிற படத்தில் ஸ்ரீவித்யா முதுவுக்கு சோப்பு போடும் காட்சிகளெல்லாம் நடித்தார். எனவே, தயாரிப்பாளர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை. அப்போதுதான் விஜய் மீது நம்பிக்கை வைத்து இயக்குனர் விக்ரமன் அவரை வைத்து ‘பூவே உனக்காக’ படத்தை இயக்கி விஜயின் மீது ரசிகர்களுக்கு இருந்த இமேஜையையே மாற்றினார். அதன்பின் விஜயின் மார்க்கெட்டும் எகிறியது.

unnai
அதன்பின் சில வருடங்கள் கழித்து விஜயை வைத்து ‘உன்னை நினைத்து’ என்கிற படத்தை துவங்கினார் விக்ரமன். இதில் நடிக்க சம்மதித்த விஜய் சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். ஆனால், சில காரணங்களால் படத்திலிருந்து விலகினார். அதன்பின் அவருக்கு பதில் சூர்யா அப்படத்தில் நடித்து அப்படம் வெளியானது. அப்படத்திற்கு பின் விக்ரமனும், விஜயும் இதுவரை இணையயவே இல்லை.
அதேபோல், சில படங்களில் நடித்திருந்த சூர்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்கிய திரைப்படம் ‘காக்க காக்க’. இப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினர் சூர்யா. இப்படத்தின் ஹிட் அவரின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்தது. அதன்பின் கவுதம் மேனனுடன் ‘வாரணம் ஆயிரம்’ படத்திலும் சூர்யா நடித்தார்.
சூர்யாவின் ஃபேவரைட் இயக்குனராகவும் கவுதம் மேனன் இருந்தார். ஆனால், அதே கவுதம் மேனன் சூர்யாவை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை எடுக்க நினைத்த போது அப்படத்தில் நடிக்க சூர்யா சம்மதித்தார். ஆனால், கவுதம் மேனன் முழுக்கதையை உருவாக்கவில்லை. அதற்காக சில மாதங்கள் காத்திருந்த சூர்யா அப்படத்திலிருந்து விலகுவதாக பத்திரிக்கைக்கு செய்தி அனுப்பினார்.
அதேபோல், நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்கள் மூலம் சூர்யாவுக்குள் இருந்து சிறப்பான நடிப்பை வெளிக்கொணர்ந்தவர் பாலா. ஆனால், அவரின் இயக்கத்தில் உருவான ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா சமீபத்தில் வெளியேறினார்.
இப்படி தனக்கு ஹிட் கொடுத்த இயக்குனர்களையே ஹீரோக்கள் கழட்டிவிட்ட சம்பவம் திரையுலகில் நிறைய நடந்துள்ளது.
அவற்றை பின்பு பார்ப்போம்..
இதையும் படிங்க: ஒரே ஒரு முறை ஆசைப்பட்டதை செய்த 5 சினிமா பிரபலங்கள்…அதுக்கு அப்புறம் ட்ரையே பண்ணலையாம்!…