Connect with us
actors

Cinema History

சொந்த படம் தயாரித்த முன்னணி நடிகர்கள்…இதில் டாப் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரித்தும் வந்தனர் நடிகர்கள். தியாகராஜபாகவதர் காலம் முதல் சிவகார்த்திகேயன் வரை இது தொடர்கிறது. நடிகர்கள் சொந்த படம் எடுப்பதற்கு சில விசயங்களை துணிந்து செய்யலாம் அல்லது தனது வியாபார மார்க்கெட் நிலவரத்தை கருத்தில் கொண்டும் தயாரிப்பார்கள்.

தொடர் தோல்விகளால் வேறு வழியில்லாமல் சொந்த படம் எடுத்த நடிகர்களும் உண்டு. இந்த லிஸ்டில் அர்ஜீன் உண்டு. சேவகன், பிரதாப் போன்ற சொந்த படங்களை இயக்கி நடித்து அடுத்த ரவுண்டுக்கு தயாரானார் அவர்.

sivakarthikeyan

ரஜினி: ரஜினி முதன்முதலில் தயாரித்த படம் மாவீரன். இளையராஜா இசையமைத்த அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘வள்ளி’ என்ற படத்தினை தயாரித்து நடித்தார். இந்த படமும் அவருக்கு சரியாக போகவில்லை. முத்து படத்துக்கு பின் படையப்பா படத்தை தயாரித்தார். இது சூப்பர் ஹிட்டாகவே அருணாச்சலம், பாபா போன்ற படங்களை தயாரித்து நடித்தார். பாபா நஷ்டத்திற்கு பின்னர் அவர் நடிப்பதை மட்டும் செய்து வருகிறார்.

rajinikanth

கமல்ஹாசன்: இவர் ராஜ்கமல் பிலில் எண்டர் நேசனல் என்ற நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகிறார். இதில் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. தனது 100வது படமான ராஜ பர்வையில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து தயாரிப்பில் இருந்து வருகிறது. அவற்றில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள்,தேவர்மகன், ஹே ராம், விஸ்வரூபம், உள்ளிட்டவை அடங்கும்.

kamal-4

விஜயகாந்த்: விஜயகாந்த் முதன்முதலில் தயாரித்த படம் உழவன் மகன். தனது நண்பர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தருடன் இணைந்து பல படங்களை தயாரித்துள்ளார். இவற்றில் பல படங்கள் சூப்பர் ஹிட்டாகவே அமைந்தன. அவற்றில் நல்லவன், உழவன் மகன், பூந்தோட்ட காவல்கரன். புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்கள் அடங்கும்.

ராவுத்தருடன் ஏற்பட்ட மன கசப்பிற்கு பின்னர் கேப்டன் பிலிம்ஸ் மூலம் வல்லரசு,எங்கள் அண்ணா போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தார் விஜயகாந்த். சொந்த பட தயாரிப்பில் அதிக வெற்றிப் படங்களை கொடுத்தது இவராகத்தான் இருக்கும்.

சத்யராஜ்: இவர் தனது மேஜேனர் ராமனாதனுடன் இணைந்து ராஜ் பிலில் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்தினார். இதில் நடிகன், வாத்தியார் வீட்டு பிள்ளை, விஜயகாந்த் நடித்த தமிழ்செல்வன் மற்றும் வள்ளல் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தார்.

பிரபு: தனது தந்தை உருவாக்கிய சிவாஜி பிலிம்ஸ் மூலம் பட படங்களை தயாரித்து வந்தார் பிரபு. வெற்றி விழா, மைடியர் மார்தாண்டன்,ராஜகுமாரன், மன்னன் மற்றும் சந்திரமுகி ஆகிய படங்கள் முக்கியமானவை.

prabu

நடிகர் விஜயை பொறுத்தவரை தொடக்கத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாமே அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து இயக்கியதுதான். பூவே உனக்காக படத்திற்கு பின் அவர் மற்ற தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் நடிக்க துவங்கினார்.

அஜித் சொந்த படம் பக்கமே செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். தனுஷ் நானும் ரவுடிதான், எதிர் நீச்சல், மாரி, பவர் பாண்டி உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். சிம்பு சிறுவனாக நடித்த போது பல படங்கள் அவரின் தந்தை டி.ராஜேந்தர் தயாரித்து இயக்கியதுதான். வளர்ந்த பின் அவர் மற்றவர்களின் தயாரிப்பில் நடிக்க துவங்கினார்.

actors

அதேபோல், சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். அவரின் தயாரிப்பில் சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top