மேக்கப்பை கலைக்காமல் வீட்டுக்கு போன சிவாஜி!.. அவரின் அம்மா என்ன செய்தார் தெரியுமா?!..
திரையுலகில் நடிப்பில் அர்ப்பணிப்பு என்றால் அது சிவாஜி. சிவாஜி என்றால் அது அர்ப்பணிப்பு. நடிப்பை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அது எப்படி பேசும்?, எப்படி நடக்கும்? என யோசித்து நடிக்கும் நடிகர் இவர். அதனால்தான் நடிப்பின் இலக்கணம் எனவும், நடிகர் திலகம் எனவும் அவரை ரசிகர்கள் அழைத்தனர்.
சிறு வயதிலேயே அப்பாவாகவும், தத்தாவாகவும் நடித்தவர் இவர். இளமை காலத்திலேயே அப்பாவாக பல படங்களில் நடித்துள்ளார். அந்த வயதுக்கு ஏற்ப குரலையும் மாற்றி பேசியிருப்பார். இவர் போடாத வேஷமே இல்லை. சரித்திர கதாநாயகர்கள், கடவுளின் அவதாரங்கள், புராண, இதிகாசங்களில் வந்த கதாபாத்திரங்கள், சுதந்திர போரட்ட தியாகிகள், மன்னர்கள் என பல கதாபாத்திரங்களை கண் முன்னே கொண்டு வந்தவர்.
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் ஒன்றி நடிப்பார். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் திருவருட்செல்வர். இந்த படத்தில் திருநாவுக்கரசர் என்கிற வேடத்தில் 80 வயது முதியவராக அசத்தலான நடிப்பை கொடுத்திருப்பார். ஒருமுறை இந்த கெட்டப்பில் இருந்த சிவாஜி படப்பிடிப்பு முடிந்ததும் மேக்கப்பை கூட கலைக்காமல் நேராக வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.
அதோடு, அவரின் அம்மாவிடம் ‘பசியாக இருக்கிறது.ஏதேனும் உணவு இருந்தால் கொடுங்கள்’ என இவர் கேட்க, ஏதோ சாமியார் போல என நினைத்து அவரின் அம்மா வீட்டின் உள்ளே அழைத்து சென்று சாப்பாடு போட்டாராம். அதன் பின்னர்தான் அவர் மேக்கப்பை கலைத்து காட்ட அது தன் மகன் சிவாஜி என அவரின் அம்மாவுக்கு தெரிய வந்ததாம்.
திருவருட்செல்வர் திரைப்படம் 1967ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.