
Cinema News
கடைசியில் தோனிக்கும் அந்த ஆசை வந்துடுச்சு!.. எல்லாம் நயன்தாரா பண்ண வேலை!..
இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மகேந்திர சிங் தோனி. ஹெலிஹாப்டர் ஷாட் என்பது இவராலேயே மிகவும் பிரபலமானது. 2 நாட்களுக்கு முன்பு கூட இவரால்தான் சி.எஸ்.கே அணி வெற்றியை பெற்றது.
ஒருபக்கம் விளம்பரங்களில் நடிப்பது, அவ்வப்போது விஜய் போன்ற நடிகர்களை சந்திப்பது என வலம் வருகிறார் தோனி. இவரின் வாழ்க்கை கதை ஏற்கனவே பாலிவுட்டில் சினிமாவாக வெளிவந்தது.
இந்நிலையில், தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளார் தோனி. ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தோனி துவங்கியுள்ளார்.
ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளார். மேலும், தோனி தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் தோனியின் ஒரு விளம்பர படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதன் மூலம் ஏற்பட்ட நட்பே தற்போது அவரின் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் வரை சென்றுள்ளது. மேலும், விக்னேஷ் சிவன் தோனியின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவில் இதுபற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.