அழகான ராட்சசியே.. மனசத்தான் கெடுக்கிறியே!.. சுனைனா அழகில்ன் சொக்கிப்போன ரசிகர்கள்...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சுனைனா. மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் அதிகம். எனவே, வாய்ப்பு தேடிய அவருக்கு தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
சில படங்களில் நடித்தார். அதன்பின் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஆனால், அது எடிட்டிங்கில் வெட்டப்பட்டது.
நகுல் ஹீரோவாக அறிமுகமான ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் படமே சூப்பர் ஹிட். எனவே, அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.
விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடிக்க முடியாமல் போனாலும் மற்ற ஹீரோக்களுடன் நடித்தார். 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நீர்ப்பறவை, வம்சம் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
விஷாலின் மனைவியாக ‘லத்தி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘ரெஜினா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். திறமையான நடிகையாக இருந்தும் இவரால் முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை.
நிலா நிலா ஓடி வா, High princes, Figertip உள்ளிட்ட சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நடிகைகளில் சுனைனாவும் ஒருவர்.
அழகழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
அந்த வகையில், மஞ்சள் நிற உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து சுனைனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.