ஆச்சி மனோரமாவை நம்ப வைத்து ஏமாற்றினாரா நாகேஷ்!.. வெளியே வந்த ரகசியம்!..

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நாகேஷ். சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தில் மத்திய அரசு பணியை ராஜினாமா செய்தவர் இவர். அந்த அளவுக்கு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். துவக்கத்தில் சில நாடகங்களில் நடித்து பின் சினிமாவுக்கு வந்தார்.
ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதோடு, ஜெய்சங்கருடனும் பல படங்களிலும் நடித்திருக்கிறார். முன்னணி காமெடி நடிகராக நாகேஷ் மாறிய பின் அவரின் கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் காத்திருந்த சம்பவம் பலமுறை நடந்திருக்கிறது.
இதையும் படிங்க: அவங்க சொன்னா ஓகே!.. எனது வெற்றிக்கு காரணமே அவர்கள்தான்!.. நாகேஷ் சொன்ன சீக்ரெட்!..
நாகேஷை போலவே 60களில் காமெடி நடிகையாக திரையுலகில் கலக்கியவர் மனோரமா. நாகேஷுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும், மனோரமாவின் மனதில் இடம் பிடிக்க நாகேஷ் முயற்சி செய்வார். துவக்கத்தில் மறுக்கும் மனோரமா படம் முடியும் போது அவரின் காதலை ஏற்றுக்கொள்வார். அதில் பல நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
60களில் நாகேஷ் - மனோரமா ஜோடி ஒரு வெற்றிக்கூட்டணியாக அப்போது பார்க்கப்பட்டது. அன்பே வா, கலாட்டா கல்யாணம், தழம்பூ, நெஞ்சில் ஓர் ஆலயம் என பல படங்களிலும் இந்த ஜோடி நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தது. படம் வெற்றி பெற்றால் கதாநயகன், நாயகிகளுக்கு சம்பளத்தை ஏற்றி கொடுப்பது போல எங்களுக்கு கொடுப்பதில்லை என்கிற அதிருப்தியில் நாகேஷும், மனோரமாவும் இருந்தனர்.
இதையும் படிங்க: காதலுக்காக மதம் மாறிய நாகேஷ்!… கல்யாணத்துக்கு அப்புறம் அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ஒரு படத்தில் நடிக்க வேண்டாம் என நாகேஷும், மனோரமாவும் முடிவெடுத்தனர். ஆனால், மனோரமாவிடம் சொல்லாமலேயே நாகேஷ் அப்படத்தில் நடிக்க போய்விட்டார். இது மனோரமாவுக்கு கோபத்தை ஏற்படுத்த சில வருடங்கள் அவர் நாகேஷுடன் ஜோடி போட்டு நடிக்கவில்லை. அப்போதுதான் சவுகார் ஜானகி போன்ற நடிகைகளுடன் நடித்தார் நாகேஷ்.
ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் இதில் தலையிட்டு மனோரமாவின் சம்பளத்தை உயர்த்தினார். அதன்பின் நாகேஷும், மனோரமாவும் இணைந்து சில படங்களில் நடித்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.