எல்லாம் பொய்! பிக்பாஸில் கமல் நடந்து கொண்ட விதத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்
Actor Kamal: தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்தும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். சினிமாவை பற்றிய அத்தனை நுணுக்கங்களையும் கற்றறிந்தவர் கமல்.
அதனாலேயே உலகநாயகன் என்ற பெயருக்கு சொந்தக்காரராகவும் விளங்கியிருக்கிறார். பன்முகத்திறமை வாய்க்கப்பெற்றவராக இருக்கும் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்களை மிகவும் கவர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க: கல்யாணம் ஆகியும் அடங்கலயே!. நம்ம அசோக் செல்வன் மனைவி போட்டோஸ் பாருங்க!..
ஏழு சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகவும் வெற்றிகரமாக கொண்டு செலுத்தி வருகிறார் கமல். சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கொஞ்சம் கூட யோசிக்க வில்லை. ஆனால் அதன் பிறகு கமலின் ரேஞ்சே வேறு மாதிரி போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் நடிகை ஆர்த்தியும் ஒருவர். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கமலை பற்றி சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: வைரமுத்துவை கழட்டிவிட இளையராஜா பார்த்த வேலை!.. இப்படிப்பட்டவரா இசைஞானி!…
என் அப்பாவிற்கு பிறகு கமலைத்தான் என்னுடைய அப்பாவாக பார்க்கிறேன். அந்தளவுக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை எடுத்துக் கூறினார். ஏகப்பட்ட விஷயங்களை சொல்லியிருக்கிறார். அதெல்லாம் இப்போது வரை நான் பின்பற்றி வருகிறேன் என கூறிய ஆர்த்தி,
எங்கள் சீசனில் மட்டும்தான் கமல் சார் உண்மையாக இருந்திருக்கிறார் என்ற ஒரு ட்விஸ்ட்டையும் போட்டுடைத்தார். இப்போது உள்ள சீசன் வரை ஆர்த்தி பார்த்துக் கொண்டுதான் இருந்தாராம். முதல் சீசனில் மட்டும்தான் கமல் உண்மையாக இருந்திருக்கிறார் என கூறியிருக்கிறார் ஆர்த்தி. இதிலிருந்து மற்ற சீசன்களில் கமல் வேஷம்தான் போட்டுக் கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: சிவக்குமார் வீட்டு குத்துவிளக்கா இது? வர வர குறைஞ்சுக்கிட்டே போகுது.. வைரலாகும் ஜோதிகாவின் வீடியோ