எக்ஸ்ட்ரா பேமண்ட்டுக்கு போட்ட ஸ்கெட்ச்… தயாரிப்பாளருக்கு குடைச்சல் கொடுக்கும் ஜெயில் பட நடிகை…

Published on: September 28, 2022
---Advertisement---

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஆர்யாவின் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்நதி. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடித்த “ஜெயில்” திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் “தேன்” என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

தற்போது அபர்நதி “நாற்கரப் போர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகனாக லிங்கேஷ் நடித்து வருகிறார். இவர் “கபாலி”, “பரியேறும் பெருமாள்” ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தவர்.

“நாற்கரப் போர்” திரைப்படத்தை ஸ்ரீவெற்றி இயக்கிவருகிறார். இவர் ஹெச். வினோத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிவடைந்த நிலையில் இன்னும் பத்து நாட்களுக்குரிய படப்பிடிப்பு பாக்கி இருக்கிறதாம். அபர்நதி இடம்பெறும் பல காட்சிகள் எடுக்கப்பட்ட பின் திடீரென அவர் சரியாக படப்பிடிப்பிற்கு ஒத்துழைக்கவில்லையாம்.

அபர்நதி அந்த பத்து நாட்களுக்குரிய கால்ஷீட்டை கொடுப்பதில் பிரச்சனை எழுந்திருக்கிறது. பல நாட்களாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவரிடம் கால்ஷீட் நாட்களை கேட்டுள்ளார். ஆனால் அபர்நதி கால்ஷீட் கொடுக்கமுடியாது என கூறியிருக்கிறார்.

என்ன காரணம் என்று கேட்டபோது, தான் பல திரைப்படங்களில் கமிட் ஆகிவிட்டதாக அபர்நதி கூறியிருக்கிறார். எனினும் தயாரிப்பாளர் விடாமல் அபர்நதியிடம் தனது சூழ்நிலையை கூறி கால்ஷீட் கேட்டிருக்கிறார். அதற்கு அபர்நதி, பேசிய சம்பளத்தொகையோடு கூடுதலாக 3 லட்சம் கேட்டிருக்கிறார். அப்படி கொடுத்தால் அடுத்த வாரமே கால்ஷீட் தருகிறேன் எனவும் கூறியிருக்கிறார். இதை கேட்ட இயக்குனரும் தயாரிப்பாளரும் ஷாக் ஆகிவிட்டனராம்.

அபர்நதி “ஜெயில்” திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக பலரும் கூறிவந்தனர். வருங்காலத்தில் சிறப்பான நடிகையாக அபர்நதி வலம் வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாறு ஒரு தகவல் வெளிவருகிறது.

 

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.