இனிமேல் விஷாலோட கிசுகிசு வரவே வராது!.. மார்க் ஆண்டனி ஹீரோயினுக்கு ஜோராக நடந்த திருமணம்!..

நடிகை அபிநயா கையில் மெஹந்தியுடன் எடுத்திருந்த சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நேற்று அவர் 15 வருடங்களாக காதலித்து வந்தவருடன் ஹைதராபாத்தில் கோலாகலமாக அவரது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அபிநயா 2008ம் ஆண்டு நெனிந்தே என்ற தெலுங்கு படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் சில தெலுங்கு படத்தில் நடித்திருந்த நிலையில், தமிழில் சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்து பிரபலமானார். மேலும், அபிநயாவிற்கு பட வாய்ப்புகள் வரிசையாக கிடைக்க ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ஆம் அறிவு, வீரம், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அபிநயா வாய் பேசமுடியாமல், காது கேட்காமல் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அவரது முழு உழைப்பினால் திரைத்துறையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார். அபிநயா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் வெளியான பணி திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

அபிநயாவிற்கும் அவரது காதலரான வெகசனா கார்த்திக் என்கிற சன்னி வர்மாவுக்கும் கடந்த மாதம் 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. அதை தொடர்ந்து நைட் பார்ட்டி, மெஹந்தி என புகைப்படங்களை ஷேர் செய்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் அவருக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அபிநயா சிவப்பு நிற சேலையில் மிக அழகாக கல்யாண கோலத்தில் தோன்றி பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார். அவரது வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக அமைய பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.