ஒரு வழியா காட்டிட்டாங்கப்பா.. காதலனின் புகைப்படத்தை பகிர்ந்த அபிநயா

by Rohini |   ( Updated:2025-03-29 04:33:51  )
abinaya
X

abinaya

அபிநயா:தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அபிநயா. வாய் பேச முடியாத இவர் பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அபிநயா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். ஆனால் ஆண்டவன் இவரை ஒரு குறைபாடு உள்ள பெண்ணாக படைத்து விட்டார்.

சாதனை படைக்கும் அபிநயா:ஆனால் அந்த குறைபாடு தெரியாத அளவுக்கு தமிழ் சினிமாவில் சாதனைகளைப் படைத்து வருகிறார் அபிநயா. அதிக மொழிகளில் நடித்த நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார் அபிநயா. பல்வேறு ப்ரமோஷனுக்கு இவர் வரும்போது தன்னுடன் ஒரு உதவியாளரையும் அழைத்துக் கொண்டு வருகிறார் .தான் என்ன நினைக்கிறேன் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அந்த உதவியாளரை தன்னுடனே வைத்திருக்கிறார் அபிநயா.

பரவிய கிசுகிசு: அவர் மூலமாகத்தான் இவர் மனதில் உள்ளதை மற்றவர்களிடம் வெளிப்படுத்த முடியும். இவரைப் பற்றி கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிசுகிசு வந்தது. அதாவது நடிகர் விஷாலை இவர் திருமணம் செய்ய போவதாக ஒரு தகவல் வெளியானது. விஷால் மற்றும் அபிநயா மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் ஒன்றாக நடித்திருந்தனர். அதிலிருந்து இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும் இவரைத்தான் விஷால் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு தகவல் வெளியானது.

abinaya

வருங்கால கணவர்; ஆனால் அது வதந்தி என்று விஷாலே ஒரு மேடையில் கூறினார். இந்த நிலையில் அபிநயா திருமணம் செய்ய போகும் நபர் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இவருக்கும் இவருடைய நீண்ட நாள் நண்பருமான ஒருவருக்கும் இடையே தான் திருமணம் நடக்கப்போகிறது என்ற ஒரு செய்தி வெளியானது .இப்போது அவருடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தன்னுடைய வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை அபிநயா வெளியிட்டு இருக்கிறார். அந்த ஒரு புகைப்படம் தான் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.

நாடோடிகள், குற்றம் 23, மார்க் ஆண்டனி, என பல்வேறு படங்களில் நடித்துள்ளார் அபிநயா. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

Next Story