இது கமலோட ஃபேவரைட் நடிகையாச்சே! ‘கூலி’ படத்தில் நாயகியாகும் பிரபலமான பேருள்ள நடிகை

Published on: June 5, 2024
rajini
---Advertisement---

Coolie Movie: சினிமாவில் நடிக்க வரும் பெரும்பாலான நடிகைகளின் கனவு ஒரு பக்கம் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்பது இன்னொரு பக்கம் எப்படியாவது டாப் நடிகர்களுடன் ஒரு படத்தில் ஆவது இணைய வேண்டும் என்பது. அந்த வகையில் 80களில் இருபெரும் ஆளுமைகளாக இருந்த ரஜினி கமல் இவர்களுடன் இணைந்து நடித்த பல நடிகைகள் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

80களில் நடித்த நடிகைகளால் கூட ரஜினி கமலுடன் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.  உதாரணமாக  கமலுடன் ஜோடி சேர்ந்த நடித்த நிரோஜா ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லை. அதன் பிறகு லால் சலாம் படத்தில் அந்த ஆசை நிறைவேறியது. இப்படி கமல் ரஜினி ஆகிய இருவருடனும் இப்ப வரைக்கும் ஒரு படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என பல நடிகைகள் ஏங்கி வருகின்றன.

இதையும் படிங்க: OMG! ஏமிக்கு இவ்ளோ பெரிய பையனா? கூடவே காதலருடன் உல்லாசம் வேற.. மஜாதான்..வைரலாகும் புகைப்படம்

அந்த வகையில் கூலி படத்தில் ரஜினிக்கு நாயகியாக ஏற்கனவே ஷோபனா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் இணைந்து தளபதி படத்தில் நடித்திருக்கின்றனர். அதன்பிறகு இந்த கூலி படத்தில் மீண்டும் இணைகின்றனர் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி கூலி படத்தில் ஷோபனா நடிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

அவருக்கு பதிலாக கமலின் ஃபேவரைட் நடிகை ஒருவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் வேறு யாருமில்லை. நடிகை அபிராமி. கமலுடன் இணைந்து விருமாண்டி படத்தில் ஜோடியாக நடித்த அபிராமி அந்த படத்திற்கு பிறகு பெருமளவு அனைவராலும் பிரபலமாக பேசப்பட்டார். அது மட்டுமல்லாமல் எல்லா ஊர் மொழிகளையும் சரளமாக பேசக்கூடியதில் வல்லவர் அபிராமி.

abirami
abirami

இதையும் படிங்க: தமிழக தேர்தல் ரிசல்ட்!.. ரெண்டு பேருக்கு மட்டும் வாழ்த்து சொன்ன விஜய்!.. பார்ட்டி செம அப்செட்டா!…

இதனாலையே கமலுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக மாறினார். இதன் காரணமாகவே விஸ்வரூபம் படத்தில் அபிராமியை டப்பிங் கொடுக்க வைத்தார் கமல். இந்த நிலையில் கூலி படத்தில் இப்போது ரஜினிக்கு நாயகியாக மாறி இருக்கிறார் அபிராமி என கோடம்பாக்கத்தில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.