
Actress Abitha: தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான இயக்குனராக பாலா இன்று வரை இருந்து வருகிறார். அவருடைய படங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்த படமாக அமைந்தது சேது. அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்ததுடன் விக்ரமுக்கும் இந்த படம் பெரிய புகழை பெற்று தந்தது. அதுவரை சினிமாவில் வாய்ப்புகளுக்காக தேடிக் கொண்டிருந்த விக்ரமுக்கு சேதுபடம் ஒரு வரப் பிரசாதமாகவே அமைந்தது.
விக்ரமை போலவே இந்த படத்தில் அவருக்கு இணையான புகழைப் பெற்றவர் படத்தின் ஹீரோயினாக நடித்த அபிதா. அபிதா குஜலாம்பாள் என்ற அந்த கதாபாத்திரத்தின் பெயர் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. படத்தை பார்த்த அனைவரும் ஹீரோயினுக்கான சரியான தேர்வு அபிதா தான் என்று அவரின் நடிப்பை பாராட்டி புகழ்ந்து வந்தனர்.
இதையும் படிங்க:அய்யா நீங்க உண்மைய சொல்றதுக்குள்ள காசெல்லாம் மனோஜ் கரைச்சிடுவாரு போலயே!
1999 இல் வெளிவந்த இந்த சேது படம் 24 ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. பாலா அறிமுகமான முதல் படமாகவும் இந்த சேது திரைப்படம் அமைந்தது. பாலாவை பற்றியும் பல விமர்சனங்கள் தமிழ் திரையுலகில் முன்வைக்கப்படுகின்றன. மிகவும் கோபக்காரர். எதற்கும் காம்ப்ரமைஸ் ஆக மாட்டார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அந்தப் படத்தில் நடித்த ஹீரோயின் அபிதா சமீபத்திய ஒரு பேட்டியில் அவருடைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது வேறொரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு அபிதாவுக்கு கிடைத்ததாம். அதனால் பாலாவிற்கு கோபமோ என்னவோ தெரியவில்லை. சேது படம் சம்பந்தப்பட்ட எந்த விழாவிற்கும் என்னை அழைக்கவே இல்லை. அது மட்டும் அல்லாமல் இந்த படத்தின் முதல் ரஷ் காட்சிகளை ரஜினிகாந்துக்கு போட்டு காண்பிக்கும் போது கூட விக்ரம் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் இவர்கள்தான் அங்கு இருந்தார்களளே தவிர. அதற்கும் என்னை அழைக்கவில்லை.
இதையும் படிங்க: அடுத்த பொண்ணு ரெடி!.. அக்காவை தொடர்ந்து அதிதி ஷங்கருக்கும் திருமணம் ஆகப் போகுதா?..
ஒரு படத்தை பொறுத்த வரைக்கும் ஹீரோ ஹீரோயின் என இரண்டு பேருமே மிக முக்கியம். நானும் இந்த படத்திற்காக கடின உழைப்பை போட்டிருக்கிறேன். ஆனால் படத்தைப் பார்த்த இளையராஜா என்னை மிகவும் பாராட்டினார் என கேள்விப்பட்டேன். நான் மிக நன்றாக நடித்திருக்கிறேன் என அவர் சொன்னதாக என்னிடம் வந்து சொன்னார்கள். இவை எதையும் நான் என் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளவில்லை. பாலா இருந்ததைப் போலவே நானும் எதற்கும் அவரை அழைக்கவில்லை. மேலும் வாய்ப்புகளுக்காக நான் அவரிடம் எதுவும் கேட்கவும் இல்லை. எனக்கு அது தேவையும் இல்லை என ஒரு பேட்டியில் அபிதா கூறி இருக்கிறார்.