Ajith: அஜித் விஜய் என தமிழ் சினிமாவில் பெரும்புள்ளியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் – சிவாஜி ,ரஜினி – கமல் இவர்கள் வரிசையில் அடுத்ததாக விஜய் – அஜித் இவர்கள்தான் மார்க்கெட்டில் ஒரு உச்சம் தொட்ட நடிகர்களாக இருந்து வருகிறார்கள். இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் தங்கள் ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர்.
ஒரு பக்கம் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற திரைப்படத்திலும் விஜய் கோட், அடுத்ததாக எச் வினோத் படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்கள். அஜித் விஜய் நடிக்கும் படத்தில் ஏதாவது ஒரு சின்ன கேரக்டர் கிடைத்தாலும் போதும் என்ற மனநிலையில் நடிக்க வரும் நடிகர்கள் ஏராளம். அதில் அஜித்துக்கு ஜோடியாகும் வாய்ப்பை மிஸ் பண்ண ஒரு நடிகை பற்றிய செய்தி தான் தற்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: நம்ம பசங்க தான் ஒளிஞ்சிருக்க லட்சணம் அப்படி… வசமாக சிக்கிய சூர்யா44 மியூசிக் டைரக்டர்…
அவர் வேறு யாருமில்லை சேது படத்தில் ஹீரோயினாக நடித்த அபிதா. சேது படத்திற்கு முன்பே அபிதா சீரியல்களிலும் ஒரு சில படங்களில் தோழி கேரக்டரிலும் நடித்து வந்திருக்கிறார். அவருடைய புகைப்படத்தை எதார்த்தமாக பார்த்த பாலா சேது படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய அபிதாவை இளையராஜாவும் ஒரு சமயம் பாராட்டிருப்பதாக அபிதா கூறியிருந்தார்.
இப்படி ஒரு மாஸ் ஹிட் படத்தில் நடித்த முடித்ததும் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்து விட்டார் அபிதா. திடீரென திருமதி செல்வம் என்ற ஒரு சீரியலில் லீடு ரோலில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டினார். ஆனால் படத்தை விட அந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை அபிதாவிற்கு பெற்றுக் கொடுத்தது.
இதையும் படிங்க: அப்படி மட்டும் பாக்காத!.. எங்க ஹார்ட்டு வீக்கு!.. நாட்டுக்கட்ட உடம்பை காட்டும் விஜே பார்வதி…
இருந்தாலும் சேது படத்திற்குப் பிறகு தன்னை வழி நடத்தவோ அல்லது சினிமாவில் எப்படி சான்ஸ் கேட்க வேண்டும் என்றோ தனக்கு தெரியாது என்றும் ஒரு பிஆர்ஓ வை கூட நான் வைத்துக் கொள்ளவில்லை என்றும் அதனால் தான் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு பிளாஷ்பேக்கில் வரும் மீனா கேரக்டரில் என்னை அழைத்தும் நான் செல்லவில்லை என்றும் மிக வருத்தத்துடன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் அபிதா.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…