அச்சுல வார்த்த சிலை!..இந்த மாதிரி போஸ் கொடுத்தா சும்மா இருப்போமா?..அதிதியின் அசத்தலான கிளிக்ஸ்!..
இள நெஞ்சங்களை தன் ஒரே ஒரு படத்தால் கொள்ளை கொண்டவர் நடிகை அதிதி ஷங்கர். மருத்துவரான இவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் அப்பாவின் ஆசைப்படி படிப்பையும் முடித்து துடிப்போடு சினிமாவில் நுழைந்திருக்கிறார் அதிதி.
கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த படத்தில் அவர் ஆடிய நடனம் தான் ஹைலைட்.
மேலும் அவரது துணிச்சலான பேச்சு, நடிப்பின் மீதுள்ள துடிப்பு அவரை பார்க்கும் போதே தெரிகிறது.
அந்த படத்தின் வெற்றி அவரை இன்னும் ஒரு படி முன்னோக்கி சென்றிருக்கிறது. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹீரோவிற்கு ஜோடியாக தன்னுடைய இரண்டாவது படமும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இது ஒருபக்கம் இருந்தாலும் மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் அதிதி.
தன்னுடைய ஸ்டைலிஷான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கொஞ்ச வைக்கிறார்.
இந்த நிலையில் பட்டுப் புடவையில் மின்னும் அழகுடன் அழகாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் அதிதி. அதை பார்த்து ரசிகர்கள் அதிதியை ரசித்து வருகின்றனர்.