More
Categories: Cinema News latest news

ஐஸ்வர்யா லட்சுமி மேட்ரிமோனியில மாப்பிள்ளை தேடினாங்களா?!… ஆனா நடந்த சம்பவமே வேற!…

மேட்ரிமோனியில் சுய விவரங்களை பார்த்த பலரும் அது போலியானது என்று நினைத்து விட்டதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஆக்ஷன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கை கொடுக்கவில்லை.

Advertising
Advertising

இதையும் படிங்க: அட ஆத்தாடி.. நயன் விக்கி திருமண டாக்குமெண்ட்ரிக்கு இத்தனை கோடியா? அப்போ தனுஷ் கேட்டது நியாயம் தானே?

அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு நல்ல வரவேற்பை கொடுத்தது. பின்னர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் டூப் எதுவும் போடாமல் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து மிரட்டி இருந்தார்.

இந்நிலையில் ‘ஹலோ மம்மி’ என்கின்ற மலையாளத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அப்போது திருமணம் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘முதலில் திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் மேட்ரிமோனியில் பதிவு செய்யும்படி என் தாயாரிடம் கூறினேன். அவரும் என்னுடைய புகைப்படத்துடன் விவரங்களை பதிவு செய்திருந்தார்.

ஆனால் அதை பார்த்த பலரும் போலி என்று நினைத்து விட்டார்கள். எனக்கு திருமணம் என்ற விஷயத்தில் நம்பிக்கை இல்லை. என்னுடைய 8, 10 மற்றும் 25 வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்பது கனவாக இருந்தது. நான் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் தற்போது திருமணத்தின் மீதான பார்வை மாறிவிட்டது.

இதையும் படிங்க: கங்குவாவ எப்படியாச்சும் காப்பாத்து சாமி!.. சிறுத்தை சிவாவுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா!…

நான் வளர வளர என்னைச் சுற்றியுள்ள திருமணமானவர்களை பார்க்கும்போது அதில் பலரும் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு சிலர் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்தார்கள். இதனால் எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை வரவில்லை. இப்போது தனக்கு 34 வயதாகின்றது. கடந்த ஒரு வருடத்தில் நான் பார்த்தவர்களில் ஒரு திருமண தம்பதிகள் மட்டுமே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களும் மலையாளி கிடையாது. மற்றவர்கள் சமரசம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். திருமணம் என்பது எனக்கு சரி வராது என்ற புரிதலும் விழிப்புணர்வும் அதன் பிறகு தான் எனக்கு ஏற்பட்டது’ என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.

Published by
ramya suresh