சூரியுடன் இணையும் பொன்னியின் செல்வன் பட நடிகை!.. அட இவங்களா?.. கொஞ்சம் உஷாரா இருங்க..
நடிகர் சூரியின் அடுத்த திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் சூரி:
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி பின்னர் காமெடி கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு தொடர்ந்து காமெடியில் கலக்கி வந்தார் நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து டாப் நடிகர்களுடனும் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.
இதையும் படிங்க: வாளிப்பான உடம்பு வசியம் பண்ணுது!.. அந்த இடத்த ஓப்பனா காட்டும் கோட் பட நடிகை!…
ஹீரோ அவதாரம்:
காமெடி கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வந்த நடிகர் சூரி விடுதலை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக மாறினார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது விடுதலை 2 திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
இது இல்லாமல் கருடன், கொட்டுகாளி என இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் சூரி. காமெடி நடிகர் எப்படி ஹீரோவாக நடிப்பார் என்று பலரும் கூறிவந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் விடுதலை, கருடன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது பல இயக்குனர்கள் இவருக்கு கதை கூறுவதற்கு தயாராக இருந்து வருகிறார்கள்.
புதிய திரைப்படம்:
நடிகர் சூரி தனது கைவசம் ஏழு கடல் ஏழுமலை என்ற திரைப்படத்தை வைத்திருக்கின்றார். அதனை தொடர்ந்து விலங்கு என்னும் வெப் சீரியஸை இயக்கி மிகப் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருந்தார். இது தொடர்பான தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படம் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அதாவது இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் பொன்னியின் செல்வன், கட்டாகுஸ்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: Gossip: விரல் வித்தை நடிகரின் மாஸ் கம்பேக்… நம்பர் நடிகையின் வீழ்ச்சி!… இப்படி ஆகிப்போச்சே!
நடிகர் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி இணைய இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் கட்டாகுஸ்தி படத்தில் பலரையும் பந்தாடியிருப்பார். அதனால் சற்று அவரிடம் உஷாராகவே இருங்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.