ஒரு படம் துவங்கப்படும்போது ஒரு ஹீரோவை மனதில் வைத்துதான் பெரும்பாலான இயக்குனர்கள் கதை எழுதுவார்கள். ஆனால், அது நடக்கும் என சொல்ல முடியாது. அவருக்கு பதில் வேறு ஹீரோ நடிப்பார். எனவே, கதையில் சில மாற்றங்களையும் செய்வார்கள். சிவாஜிக்கு சென்ற சில கதைகளில் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார். கமலுக்கு போன கதையில் ரஜினி நடித்துள்ளார். அஜித்துக்கு போன கதையில் சூர்யா நடித்துள்ளார். விஜய் நடிக்க மறுத்த கதைகளில் விஷால் நடித்துள்ளார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
கமலின் திரைவாழ்வில் மிகவும் முக்கியமான படமாகவும், எப்போதும் பேசப்படும் படமாகவும் இருப்பது தேவர் மகன். இப்படத்தின் கதை ,திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசனே எழுதியிருந்தார். மலையாள பட இயக்குனர் பரதன் இப்படத்தை இயக்கினார். கிராமத்தில் வசிக்கும் அப்பாவை பார்க்க வரும் கமல்ஹாசன் சாதி பிரச்சனை மற்றும் பரம்பரை பகையில் சிக்கி தவிக்கும் கிராமத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. கமலின் அப்பாவாக நடிகர் திலகம் சிவாஜியும், வில்லனாக நாசரும் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் கமலின் காதலியாக கவுதமியும், மனைவியாக ரேவதியும் நடித்திருப்பார்கள். ஆனால், கவுதமியின் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஐஸ்வர்யாதானம். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ‘தேவர்மகன் படத்தில் ரேவதி வேடத்தில் மீனாவும், கவுதமி வேடத்தில் நானும் நடிக்கவிருந்தோம். அப்போதுதான் பாக்கியராஜ் ‘ராசுக்குட்டி’ படத்தை எடுத்தார்.
என்னை அதில் நடிக்க அவர் கேட்டபோது என்னிடம் கால்ஷீட் இல்லை என்றேன். அவர் கடுப்பாகிவிட்டார். ஏற்கனவே இரண்டுமுறை என்னை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க அவர் ஆசைப்பட்டு நடக்காமல் போனது. ‘எப்போது கேட்டாலும் இந்த பெண்ணிடம் கால்ஷீட் இல்லையே’ என சொல்லிவிட்டு வேறு நடிகையை பார்க்க துவங்கினார். ஆனால், தேவர் மகனில் மீனாவுக்கு பதில் ரேவதியும், எனக்கு பதில் கவுதமியும் நடிப்பதாக எனக்கு செய்திகள் கிடைத்தது. எனவே, நான் பாக்கியராஜ் சாருக்கு ஜோடியாக ராசுக்குட்டி படத்தில் நடித்தேன்’ என அவர் கூறினார்.
மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் மதுபாலா நடித்த வேடம் முதலில் ஐஸ்வர்யாவுக்குதான் வந்தது. ஆனால், கால்ஷீட் இல்லாததால் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. இதையும் சொல்லி ஒரு நல்ல படத்தில், நல்ல வேடத்தை மிஸ் பண்ணிவிட்டேன்’ என ஐஸ்வர்யா கூறியிருந்தார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…