Actress Aishwarya Rajesh: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தோற்றத்திலும் நடிப்பிலும் மிகவும் எதார்த்தமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்கா முட்டை’ படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது.
காக்கா முட்டை படம் இரண்டு பசங்களை மையப்படுத்தி அமைந்த திரைப்படமாகத்தான் இருந்தது. அந்த இரண்டு பசங்களுக்கு அம்மாவாகத்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். அப்படி நடிக்கிறதுக்கும் ஒரு தைரியம் வேண்டும்.
இதையும் படிங்க: அஜித்தை அசிங்கப்படுத்திய கேப்டன் மில்லர் நடிகர்!.. இதெல்லாம் ரொம்ப ஓவர்ப்பா!…
சினிமாவில் நுழைந்த புதிதில் இந்த மாதிரி அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சில நடிகைகள் தயங்குவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் அதை சிறப்பாக செய்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென தனி பாணியை உருவாக்கினார்.
அதன் பிறகு பெண்களை மையப்படுத்தி அமையும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். ரசிகர்களிடம் தனி கவனம் பெற்ற நடிகையாகவும் வந்தார். அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இதையும் படிங்க: படத்தின் பிரிவ்யூ ஷோவுக்காக கலைஞரை காக்க வைத்த ரஜினி!.. அவர் சொன்ன காரணம் இதுதான்!..
இந்த நிலையில் விஜயகாந்த் மறைவிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வரவில்லை. அதன் பிறகு ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்த அவரிடம் பத்திரிக்கையாளர் ஏன் வரவில்லை என்று கேட்க, அதற்கு ஐஸ்வர்யா நான் தொலை தூர இடத்தில் இருந்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் விடாமல் கேட்ட பத்திரிக்கையாளர் எங்கு இருந்தீர்கள் என்றும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பாண்டிச்சேரியில் இருந்தேன் என்று பதில் கூறியிருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் ஐஸ்வர்யாவை கிழித்து தொங்கவிட்டனர்.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த வேலை… கோபத்தில் வீட்டுக்கே போய் சண்டை போட்ட விஜயகாந்த்…
இங்கு இருக்கும் பாண்டிச்சேரியில் இருந்து வரமுடியவில்லையா? அவருக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் நடிகர் சங்கத்திற்காக அவர் செய்த செயல், நடிகர் சங்கத்தலைவராக இருந்திருக்கிறார். ஒரு அடிக்கல்லை நாட்டியவர் என்ற முறையிலாவது வந்திருக்கலாம் என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா எப்போதும் அவர் முதல் படத்தை பற்றி பேசவே மாட்டாராம். அந்தப் படத்தின் பெயர் ‘அவர்களும் இவர்களும்’ . படத்தின் ஹீரோ அழகி பட இளம் வயது பார்த்திபனாக நடித்திருப்பாரே. அவர்தான் ஹீரோவாம். ஐஸ்வர்யா தான் ஹீரோயினாம். ஹீரோ ஹீரோயின் இருவரும் கருப்பாக இருந்ததனால் படத்தின் இயக்குனர் இவர்களை ப்ரோமோட் செய்ய கடுமையாக உழைத்தாராம்.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த வேலை… கோபத்தில் வீட்டுக்கே போய் சண்டை போட்ட விஜயகாந்த்…
ஆனால் ஏதோ காரணத்தால் படம் அப்படியே நின்று விட்டதாம். இயக்குனரும் சினிமாவே வேண்டாம் என ஓடி விட்டாராம். ஆனால் இதை பற்றி ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவே மாட்டார் என்று செய்யாறு பாலு கூறினார்.
