தொடர் தோல்வி! விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த திடீர் முடிவு
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மாநிறம், ஓரளவு அழகு இவைகளை வைத்துக்கொண்டு மட்டும் தன்னுடைய திறமையால் ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார். எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தக் கூடியவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளராக வந்தார். ரம்மி ,பண்ணையாரும் பத்மினியும் ,ஆச்சரியங்கள் போன்ற படங்களின் மூலம் நடிப்பில் ஸ்கோர் செய்த நடிகையாக திகழ்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாகவே அமைந்திருக்கின்றன. ஆனால் சமீப காலமாக இவர் நடித்து வெளியான த கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற படங்கள் வரிசையாக தோல்வியையே தழுவினர். அந்தப் படங்கள் பெரும்பாலும் ஹீரோயின் சப்ஜெக்ட் ஓரியண்டட் படங்களாகவே அமைந்தன. ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த மாதிரி கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் ஒரு படங்கள் கூட சரியாக ஓடவில்லை.
இந்த தொடர் தோல்வி காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென்று ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம். இப்படியே தோல்வி படங்களாகவே கொடுத்தால் எங்கே நாம் சினிமாவை விட்டு விலகிப் போய்விடுவோமோ என நினைத்தது அந்த முடிவை எடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் கூறி வருகின்றனர்.
அதாவது இனிமேல் நடித்தால் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்து இருக்கிறாராம். ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளை இனிமேல் கையில் எடுக்கப் போவதில்லை என்ற எண்ணத்திலும் இருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதையும் படிங்க : மாறுவேடத்தில் போய் என்.எஸ்.கேவை சோதித்த ஐடி ரெய்டு அதிகாரி!.. இதுதான் நடந்தது!…
COPYRIGHT 2024
Powered By Blinkcms