Cinema News
ராமராஜன் பட ஷூட்டிங்கில் நடந்த அத்துமீறல்… பகீர் கிளப்பும் பிரபல நடிகை…
தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஐஸ்வர்யா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். குறிப்பாக சூர்யா நடித்த “ஆறு” திரைப்படத்தில் சவுண்டு சரோஜா என்ற கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார். இக்கதாப்பாத்திரம் மிகவும் பிரபலமான கதாப்பாத்திரமாக அறியப்பட்டது.
சமீப காலமாக பல பேட்டிகளில் தன்னுடைய மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது பொருளாதார நிலை மந்தமாகியுள்ளதாகவும் தன்னுடைய சோக நிலையை பகிர்ந்துகொண்டு வந்தார். இதனிடையே ராமராஜன் படப்பிடிப்பின்போது தனக்கு நேர்ந்த ஒரு அத்துமீறல் சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு ராமராஜன், ஐஸ்வர்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஊரெல்லாம் உன் பாட்டு”. இளையராஜா இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இத்திரைப்படத்தை சிராஜ் என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள், ராமராஜனை பார்க்க அதிக ரசிகர்கள் கூடிவிட்டார்களாம். அப்போது கூட்டத்தில் ஒருத்தர் ஐஸ்வர்யாவை குறிப்பிட்டு “ஐஸ், வர்ரீயா?” என கேட்டார்களாம்.
இது குறித்து அப்பேட்டியில் பேசிய ஐஸ்வர்யா “1990களிலேயே இது போன்ற விஷயங்களை நான் சந்தித்திருக்கிறேன்” என மிகவும் வருத்தத்தோடு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.